கனடாவில் வேன் மோதி கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் வரைந்துள்ள படம்: பிரிவைச் சொல்லாமல் சொல்லும் துயரம்


கனடாவில், வேன் ஒன்றைக்கொண்டு பாதசாரிகள் மீது வேண்டுமென்றே மோதி 10 பேரை கொலை செய்த நபர் வழக்கில் தீர்ப்பு வழங்கப்படுவதற்கு முன், பாதிக்கப்பட்டவர்களின் தாக்க அறிக்கைகள் நீதிமன்றத்தில் சமர்ப்பிக்கப்பட்டன.

அப்போது, இலங்கைப் பெண்ணான ரேணுகா அமரசிங்கவின் மகனான Diyon (9), படம் ஒன்றை தனது தாக்க அறிக்கையாக சமர்ப்பித்திருந்தான்.

தன் தாயும் தானும் பனிச்சறுக்கு செய்வது போல் படம் ஒன்றை வரைந்திருந்தான் Diyon.
தானும் தன் தாயும் முன் சென்ற இடம் ஒன்றையோ, அல்லது இனி செல்லவேண்டும் என தான் வைத்திருந்த ஆசையையோ படமாக வரைந்திருந்தான் அந்தச் சிறுவன்.

கனடாவில் வேன் மோதி கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் வரைந்துள்ள படம்: பிரிவைச் சொல்லாமல் சொல்லும் துயரம்

(Court exhibit)

அவனைப்போலவே, அந்த பயங்கர சம்பவத்தில் தனது தோழியை இழந்ததுடன் முகத்தில் படுபயங்கர காயங்கள் அடைந்த So Ra என்ற பெண், தன் இதயத்தில் நிரந்தரமாக ஒரு வெற்றிடம் ஏற்பட்டுவிட்டதுபோல் உணர்வதாக தெரிவித்தார்.

கனடாவில் வேன் மோதி கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் வரைந்துள்ள படம்: பிரிவைச் சொல்லாமல் சொல்லும் துயரம்

Photo Credit: Albert Leung/CBC

அந்த சம்பவத்தில் பாதிக்கப்பட்டவர்கள், உயிரிழந்தவர்களின் நண்பர்கள், உறவினர்களின் தாக்க அறிக்கைகளை கவனமாகக் கேட்ட நீதிபதி Justice Anne Molloy, குற்றவாளியான அலெக் மின்னேசியனுக்கு 25 ஆண்டுகளுக்கு ஜாமீனில் வர முடியாத ஆயுள் தண்டனை விதித்து தீர்ப்பளித்தார்.

அத்துடன், கொலை முயற்சிக் குற்றங்களுக்காக மின்னேசியனுக்கு 20 ஆண்டுகள் சிறைத்தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது. இந்த தண்டனைகளை அவர் ஏக காலத்தில் அனுபவிக்கவேண்டும்.

கனடாவில் வேன் மோதி கொல்லப்பட்ட இலங்கைப் பெண்ணின் மகன் வரைந்துள்ள படம்: பிரிவைச் சொல்லாமல் சொல்லும் துயரம்Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.