சென்னை வாகன ஓட்டிகள் கவனத்துக்கு – முக்கிய சாலையில் போக்குவரத்து மாற்றம்: ஏன் எதற்கு?

மவுண்ட் ஜிஎஸ்டி சாலையில் போக்குவரத்து மாற்றத்தை அறிவித்துள்ளது சென்னை போக்குவரத்து காவல்துறை.
சென்னை மவுண்ட் பாலாஜி மருத்துவமனை அருகில் ஜி.எஸ்.டி சாலை, உள்செல்லும் சாலையில் பின்னர் வெளி செல்லும் சாலையிலும் போக்குவரத்து மாற்றம். இந்த இடங்களில் நெடுஞ்சாலை துறையினரால் நிரந்தர மழைநீர் வடிகால் அமைக்கும் பணி நடைபெற இருப்பதால் வாகன போக்குவரத்தை மாற்றுப் பாதையில் செல்லும் படி சோதனை அடிப்படையில் 14.06.2022 மற்றும் 15.06.2022 ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 வரை சோதனை ஓட்டம் நடைபெறும் என்று சென்னை போக்குவரத்து காவல்துறை தெரிவித்துள்ளது.
பின்னர் நேரடி பணி 18.06.2022 மற்றும் 19.06.2022 ஆகிய இரு நாட்களும் இரவு 11 மணி முதல் அதிகாலை 5 வரை நடைபெறும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையொட்டி அங்கு போக்குவரத்து மாற்றம் செய்யப்படுகிறது. ஜிஎஸ்டி சாலை விமான நிலையத்திலிருந்து வரும் வாகனங்கள் கத்திப்பாரா பாலத்தில் மேலே நேராக சென்று (கிண்டி போகும் வழி செல்லாமல்) சிப்பெட் சந்திப்பில் வலது புறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணா சாலை சென்றடையலாம் என்று சென்னை போக்குவரத் காவல்துறை தெரிவித்துள்ளது.
image
பூந்தமல்லியில் இருந்து வரும் வாகனங்கள் மாற்றம் எதுவுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா வழியாக) செல்லலாம். வடபழனியிலிருந்து வரும் வாகனங்கள் மாற்றம் ஏதுமின்றி வழக்கமான சாலையில் (கத்திப்பாரா சர்வீஸ் சாலை வழியாக) செல்லலாம். கத்திப்பாரா சர்வீஸ் சாலை (கிண்டி மவுத்தில்) வேலை நடைபெறும் போது வடபழனியில் இருந்து வரும் வாகனங்கள் சிப்பெட் சந்திப்பில் இடதுபுறம் திரும்பி திரு.வி.க தொழிற்பேட்டை சாலை வழியாக கிண்டி பேருந்து நிலையம் வந்து அண்ணாசாலை சென்றடையலாம்.
எனவே சாலை பயனாளர்கள் அனைவரும் தங்கள் பயணத்தில் மேலும் சுமார் பத்து நிமிட தாமதத்தை எதிர்பார்த்து திட்டமிடுமாறு சென்னை போக்குவரத்து காவவல்துறை தெரிவித்துள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.