80 மணி நேரத்தை தாண்டி ஆழ்துளை கிணற்றில் விழுந்த சிறுவன் – மீட்க தொடரும் போராட்டம்!

சத்தீஸ்கர் மாநிலத்தில் ஆழ்துளை கிணற்றில் விழுந்த 10 வயது சிறுவனை மீட்கும் பணி 80 மணி நேரத்தையும் தாண்டி நடைபெற்று வருகிறது. ஜாங்கிரி-ஷம்பா மாவட்டம், பிஹ்ரிட் கிராமத்தைச் சேர்ந்த 10 வயது சிறுவன் ராகுல், கடந்த 10 ஆம் தேதி தனது வீட்டின் அருகேயுள்ள பயனற்ற ஆழ்துளை கிணற்றுக்குள் தவறி விழுந்தான்.

Rescue Ops Underway To Save 11-Year-Old Boy Stuck In Borewell In  Chhattisgarh | Nation
இதையடுத்து மீட்புப்பணியில் தேசிய பேரிடர் மீட்புப் படையினர் உள்பட பல குழுவினர் மீட்புப் பணியில் ஈடுபட்டு வருகின்றனர். குறிப்பாக ஆழ்துளை கிணற்றின் அருகே மிகப்பெரிய சுரங்கம் தோண்டப்பட்டுள்ளது. ராகுலின் உடல்நிலை நன்றாக இருப்பதாக, மீட்பு பணிகளை பார்வையிட்ட ஆட்சியர் ஜித்தேன்த்ரா சுக்லா தெரிவித்துள்ளார்.
In Chhattisgarh, 3 days on, rescue ops on to save boy, 11. He fell in  borewell | Latest News India - Hindustan Times
சிறுவன் சுயநினைவுடன் உள்ளதாக கூறப்படும் நிலையில், குழாய் வழியாக ஆக்ஸிஜன் அனுப்பப்பட்டு வருகிறது. இதுதொடர்பாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள சத்தீஸ்கர் முதலமைச்சர் பூபேஷ் பாகல் ஒட்டுமொத்த மாநிலமும் ராகுல் சாகுவிற்காக பிரார்த்தனை செய்வதாக கூறியுள்ளார்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.