பிடிஆர் திட்டம் நினைவானது.. ஸ்டார்ட்அப் நிறுவனத்திடம் இருந்து அரசு நேரடி கொள்முதல்..!

தமிழ்நாட்டில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களுக்கான கட்டமைப்பைச் சிறப்பாக அமைக்க வேண்டும் என்பதற்காகத் தமிழ்நாடு அரசு டான்சிம் என்று அறியப்படும் தமிழ்நாடு ஸ்டார்ட்அப் மற்றும் இன்னோவேஷன் மிஷன் அமைப்பை உருவாக்கியது.

டான்சிம் அமைப்பின் தலைமையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் தயாரிப்புகளை நேரடியாக அரசு வாங்கும் சேவையை அறிமுகம் செய்யும் விதமாக ஸ்டார்ட்அப் நிறுவனங்களையும் அரசாங்கத்தையும் இணைக்கும்’S2G Buy Day’ நடத்தப்பட்டது.

இதுகுறித்து தமிழக நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் முக்கியமான விளக்கத்தைக் கொடுத்துள்ளார்.

எலான் மஸ்க்-க்கு வந்த சோதனை.. 8 பில்லியன் டாலர் இழப்பீடு கோரி வழக்கு.. ஏன் தெரியுமா?

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

பிடிஆர் பழனிவேல் தியாகராஜன்

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் தமிழ்நாடு தகவல் தொழில்நுட்பத் துறை சார்பாக நடைபெற்ற நிகழ்ச்சியில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் புதிய கண்டுபிடிப்புகள் குறித்து அறிவித்த பிறகு மாண்புமிகு முதல்வர் அவர்களிடம் இத்தகைய ஸ்டார்ட்அப் நிறுவனங்களின் கண்டுபிடிப்புகளை அரசு நேரடியாகக் கொள்முதல் செய்து அவர்களுக்கு ஊக்கம் அளிக்க வேண்டுமென்ற கோரிக்கையினை முன்வைத்தேன் என நிதியமைச்சர் பிடிஆர் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

ரூ.50 லட்சம் வரை

ரூ.50 லட்சம் வரை

அதைத்தொடர்ந்து இந்த ஆண்டுப் பட்ஜெட் அறிக்கையில் ஸ்டார்ட்அப் நிறுவனங்களிடம் இருந்து ரூ.50 லட்சம் வரை கொள்முதல் மேற்கொள்ளலாம் என்ற அறிவிப்பு வெளியிடப்பட்டது எனப் பழனிவேல் தியாகராஜன் தெரிவித்தார்.

டெண்டர் விதிகள்
 

டெண்டர் விதிகள்

அதன் தொடர்ச்சியாக டெண்டர் விதிகளில் மாற்றங்கள் மேற்கொள்ளப்பட்டுத் தற்போது அதனை நடைமுறை படுத்தும் விதமாகத் தமிழ்நாடு சமூகப் பாதுகாப்புத் துறை சார்பில் கொள்முதல் 25 நிறுவனங்களிடம் நேர்காணல் மேற்கொள்ளப்பட்டுள்ளது.

மகிழ்ச்சி

மகிழ்ச்சி

இதனைச் சிறப்பான துவக்கமாக எண்ணி மகிழ்ச்சி அடைகிறேன், ஏனெனில் இதன் மூலம் புதிதாகத் தொழில் தொடங்கி யுள்ள ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கும், தமிழ் இளைஞர்களுக்கும் நன்மை ஏற்படுவதோடு புதிய வேலைவாய்ப்புகள் உருவாகும், பொருளாதார வளர்ச்சி ஏற்படும் என்று பழனிவேல் தியாகராஜன் தெரிவித்துள்ளார்.

S2G Buy Day துவக்கம்

S2G Buy Day துவக்கம்

‘S2G Buy Day’ என்பது ஒவ்வொரு மாதமும் இரண்டு துறைகளை மையமாகக் கொண்டு நடத்தப்படும் முக்கியமான நிகழ்வாக இகுக்கும். தமிழ்நாடு அரசு துறைகள் தீர்வுகள் அல்லது உதவியைத் தேடும் முக்கியப் பகுதிகளை ஆய்வு செய்து சவால்களை TANSIM அமைப்பு முன்வைக்கும்.

StartupTN இணையதளம்

StartupTN இணையதளம்

அரசு துறைகளின் தேவைகளை StartupTN இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும், தேர்வு செய்யப்பட்ட ஸ்டார்ட்அப் நிறுவனங்கள் முன் இறுதிப் விலை மற்றும் திட்டத்தை உரிய துறையின் மூத்த அதிகாரிகளிடம் சமர்ப்பிக்கப்படும் என்று TANSIM மிஷன் இயக்குநரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான சிவராஜா ராமநாதன் கூறினார்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

TN Govt directly procure products & services from Startup; rolls out S2G Buy Day – PTR palanivel thiagarajan

TN Govt directly procure products & services from Startup; rolls out S2G Buy Day – PTR palanivel thiagarajan பிடிஆர் திட்டம் நினைவானது.. ஸ்டார்ட்அப் நிறுவனத்திடம் இருந்து அரசு நேரடி கொள்முதல்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.