6வது நாளாக வீழ்ச்சி.. இரத்த கண்ணீர் வடிக்கும் முதலீட்டாளர்கள்.. ஏன்?

மும்பை: இந்திய பங்கு சந்தையானது ஆறாவது நாளாக தொடர்ச்சியாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது.

சர்வதேச சந்தைகள் தொடர்ந்து சரிவினைக் கண்டு வரும் நிலையில், இந்திய பங்கு சந்தையும் சரிவினைக் கண்டு வருகின்றது.

இது அதிகரித்து வரும் பணவீக்கம், ரெசசனை ஊக்குவிக்கலாம் என்ற அச்சத்தின் மத்தியில், பங்கு சந்தைகளானது சரிவினைக் கண்டு வருகின்றன.

தொடர் சரிவில் சந்தை

1 வருட சரிவினை எட்டிய சந்தையானது பி எஸ் இ சென்செக்ஸ், இன்றும் மீண்டும் சரிவினைக் கண்டுள்ளது. 30 பங்குகளை கொண்டுள்ள குறியீடான சென்செக்ஸ் ஆனது 135 புள்ளிகள் அல்லது 0.26% குறைந்து, 51,360 புள்ளிகளாகவும் முடிவடைந்துள்ளது. இதே நிஃப்டி 67 புள்ளிகள் குறைந்து, 15,293.50 புள்ளிகளாக முடிவடைந்துள்ளது.

வார நிலவரம் என்ன?

வார நிலவரம் என்ன?

இது தொடர்ந்து முதலீட்டாளர்களுக்கு ஆறாவது நாளாக சரிவினைக் கண்டு முடிவடைந்துள்ளது. இதே தொடர்ந்து இரண்டாவது வாரமாகவும் சந்தையானது சரிவினைக் கண்டுள்ளது. வார அடிப்படையில் பார்க்கும்போது சென்செக்ஸ் 2943 புள்ளிகள் அல்லது 5.41% சரிவினைக் கண்டுள்ளது. இதே நிஃப்டி 908 புள்ளிகள் அல்லது 5.93% சரிவினைக் கண்டுள்ளது.

டாப் லூசர்கள்
 

டாப் லூசர்கள்

சென்செக்ஸ் குறியீட்டில் உள்ள டைட்டன், விப்ரோ, டாக்டர் ரெட்டீஸ் லேபரட்டீஸ், ஏசியன் பெயிண்ட்ஸ், சன் பார்மா, எல் & டி, பவர் கிரிட் கார்ப் உள்ளிட்ட பங்குகள் 2.6% முதல் 6% வரையில் சரிவினைக் கண்டுள்ளன.

டாப் கெயினர்கள்

டாப் கெயினர்கள்

இதே மறுபுறம் பஜாஜ் பைனான்ஸ், பஜாஜ் பின்செர்வ், ரிலையன்ஸ், ஐசிஐசிஐ வங்கி, ஹெச் டி எஃப் சி வங்கி மற்றும் ஐடிசி உள்ளிட்ட பங்குகள் டாப் கெயினர்களாகவும் முடிவடைந்துள்ளன.

இன்டெக்ஸ்கள்

இன்டெக்ஸ்கள்

பிஎஸ்இ ஸ்மால் கேப், மிட் கேப் மற்றும் லார்ஜ் கேப் உள்ளிட்ட குறியீடுகள் 0.88%, 0.68% மற்றும் 0.65% சரிவினைக் கண்டுள்ளது. பிஎஸ்இ ஆயில் & கேஸ் குறியீடானது 3% மேலாக சரிவினைக் கண்டுள்ளது. இதே கன்சியூமர் டியூரபிள் 2.68%, எனர்ஜி 1.86%மும், பவர் 1.59%மும், 19 குறியீடுகளில் 15 குறியீடுகள் சிவப்பு நிறத்தில் முடிவடைந்துள்ளன.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

indian markets in free fall; Sensex, Nifty down for 6th consecutive day

Indian stock market ended lower for the sixth day in a row. As the international markets continue to decline, so does the Indian stock market.

Story first published: Friday, June 17, 2022, 18:43 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.