உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்கள் … ஒண்ணு கூட நம்மூரு இல்லையே

உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க 10 நகரங்கள் மற்றும் வாழ விரும்பாத 10 நகரங்கள் என்ற ஆய்வறிக்கையை தனியார் நிறுவனம் ஒன்று எடுத்து அறிக்கை வெளியிட்டுள்ளது.

எக்கனாமிஸ்ட் இன்டல்லைஜன்ட் யூனிட் என்ற அமைப்பு உலகம் முழுவதும் 173 நகரங்களில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்கள் மற்றும் வெறுக்கத்தக்க நகரங்கள் குறித்த ஆய்வுக்கட்டுரையை வெளியிட்டுள்ளது.

சுகாதாரம், அரசியல் ஸ்திரத்தன்மை, உள்கட்டமைப்பு மற்றும் பசுமையான இடங்கள் போன்ற அம்சங்கள் இதில் முக்கியமாக கணக்கிடப்பட்டுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.

உலகின் ரொம்ப காஸ்ட்லியான 15 நகரங்கள் எது.. ஏன்..?

விரும்பத்தக்க நகரங்கள்

விரும்பத்தக்க நகரங்கள்

2022ஆம் ஆண்டில் உலகில் மனிதர்கள் வாழ மிகவும் விரும்பத்தக்க நகரங்களில் முதல் இடத்தை ஆஸ்திரியா நாட்டின் வியன்னா பிடித்துள்ளது. இந்த நகரத்தில் மனிதர்கள் வாழ தகுதியான உள்கட்டமைப்பு, மிகச்சிறந்த சுகாதாரம் மற்றும் கலாச்சாரம் ஆகியவை உள்ளன என்றும், பொழுதுபோக்கு உள்பட அனைத்து அம்சங்களும் சிறப்பாக உள்ளன என்றும் ஆய்வறிக்கையில் தெரிவித்துள்ளது.

ஆய்வறிக்கை

ஆய்வறிக்கை

அரசியல் ஸ்திரத்தன்மை மற்றும் வலுவான கல்விமுறைகள் ஆகிய இரண்டு கோபன்ஹேகன் மற்றும் சூரிச் ஆகிய நகரங்களில் இருப்பதால் இந்த இரண்டு நகரங்களும் இரண்டாவது மூன்றாவது இடத்தை பிடித்துள்ளதாக இந்த ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

கனடா
 

கனடா

இந்த ஆய்வில் கனடா மிகச்சிறந்த தரவரிசையில் இருப்பதாக ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக கனடாவில் உள்ள வான்கூவர், டொரண்டோ மற்றும் கால்கரி ஆகிய மூன்று நகரங்களில் மனிதர்கள் வாழ மிகச் சிறந்த அம்சங்கள் இருப்பதாகவும், அதனால் கனடாவில் உலகில் உள்ள பலர் வாழ விரும்புவதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

பிரிட்டன்

பிரிட்டன்

ஐரோப்பிய ஒன்றியத்தை விட்டு வெளியேற பிரிட்டன் முடிவு செய்துள்ளதால் அரசியல் ஸ்திரத்தன்மை இல்லை என்று பிரிட்டனை இந்த அறிக்கையை மேற்கோள் காட்டியுள்ளது. எனவே பிரிட்டன் நாட்டில் உள்ள எந்த நகரமும் முதல் 10 இடங்களில் இடம்பெறவில்லை.

உக்ரைன்

உக்ரைன்

அதேபோல் கடந்த ஆண்டு உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்களில் ஒன்றாக இருந்த உக்ரைன் நாட்டின் கியேவ் நகரம், இந்த ஆண்டு போர் காரணமாக சேர்க்கப்படவில்லை என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில் உலகில் மனிதர்கள் வாழ மிகச் சிறந்த 10 நகரங்கள் மற்றும் மனிதர்கள் வெறுக்கத்தக்க 10 நகரங்களின் பட்டியல் இதோ:

உலகில் மனிதர்கள் வாழ மிகச் சிறந்த 10 நகரங்கள்

உலகில் மனிதர்கள் வாழ மிகச் சிறந்த 10 நகரங்கள்

1. வியன்னா, ஆஸ்திரியா
2. கோபன்ஹேகன், டென்மார்க்
3. சூரிச், சுவிட்சர்லாந்து
4. கால்கரி, கனடா
5. வான்கூவர், கனடா
6. ஜெனீவா, சுவிட்சர்லாந்து
7. பிராங்க்பர்ட், ஜெர்மனி
8. டொராண்டோ, கனடா
9. ஆம்ஸ்டர்டாம், நெதர்லாந்து
10. ஒசாகா, ஜப்பான் மற்றும் மெல்போர்ன், ஆஸ்திரேலியா

உலகில் மனிதர்கள் வாழ விரும்பாத 10 நகரங்கள்

உலகில் மனிதர்கள் வாழ விரும்பாத 10 நகரங்கள்

1. தெஹ்ரான், ஈரான்
2. டூவாலா, கேமரூன்
3. ஹராரே, ஜிம்பாப்வே
4. டாக்கா, பங்களாதேஷ்
5. போர்ட், மோர்ஸ்பி
6. பப்புவா நியூ கினி
7. கராச்சி, பாகிஸ்தான்
8. அல்ஜியர்ஸ், அல்ஜீரியா
9. திரிபோலி, லிபியா
10. லாகோஸ், நைஜீரியா

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

These are the most and least livable cities in world

These are the most and least liveable cities in world | உலகில் மனிதர்கள் வாழ விரும்பத்தக்க நகரங்கள் … ஒண்ணு கூட நம்மூரு இல்லையே

Story first published: Friday, June 24, 2022, 8:31 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.