தனியார் பேருந்து மோதி இருசக்கர வாகனம் மோதி இருவர் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
தேனி மாவட்டம், அழகர்நாயக்கன்பட்டி வடக்கு தெருவைச் சேர்ந்தவர்கள் சுப்புராஜ் (25), சுருளிராஜ் (45). இவர்கள் இருவரும் போடியில் வேலை செய்து வந்துள்ளனர். அவர்கள் போடியில் இருந்து சொந்த ஊருக்கு சென்றுகொண்டிருந்தனர்.

அப்போது, அங்கு வந்த தனியார் டிராவல்ஸ் பேருந்து இருசக்கர வாகனம் மீது நேருக்கு நேர் மோதியது. இதில், சுப்புராஜ் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். உயிருக்கு போராடி கொண்டிருந்த சுருளிராஜனை மீட்டு சிகிச்சைக்காக கொண்டு சென்றனர். ஆனால், அவர் செல்லும் வழியிலேயே உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் தனியார் பேருந்து ஒட்டுநரை இம்மானுவேல் என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.