திருமணம் குறித்து எந்த ஐடியாவும் இல்லை : ஸ்ருதிஹாசன்

பிரபாஸ் ஜோடியாக தற்போது சலார் என்ற படத்தில் நடித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த படத்தை கே.ஜி.எப் படத்தை இயக்கிய பிரசாந்த் நீல் இயக்குகிறார். இதையடுத்து அழுத்தமான கதாபாத்திரத்திங்களில் நடிப்பதற்காக கதை கேட்டு வருகிறார் ஸ்ருதிஹாசன். இந்த நிலையில் அவர் அளித்த ஒரு பேட்டியில், திருமணம் குறித்து வெளியிட்டுள்ள தகவல் அதிர்ச்சியை கொடுத்திருக்கிறது. அதாவது, கடந்த சில ஆண்டுகளாக சாந்தனு ஹசாரிகா என்பவரை தீவிரமாக காதலித்து வருகிறார் ஸ்ருதிஹாசன். அவருடன் நெருக்கமாக எடுத்துக் கொள்ளும் புகைப்படங்களையும் தொடர்ந்து வெளியிட்டு … Read more

இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை 2035ல் 67.5 கோடியாக இருக்கும்: ஆய்வறிக்கை| Dinamalar

நியூயார்க்:’இந்திய நகரங்களில் வசிப்போர் எண்ணிக்கை, 2035ல், 67.5 கோடியாக இருக்கும்’ என, ஐ.நா., அமைப்பு வெளியிட்டுள்ள ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.ஐ.நா., உலக நகரங்கள் குறித்த அறிக்கையை, நேற்று முன்தினம் வெளியிட்டது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:கொரோனா பரவல் காலத்தில், நகரங்களில் பாதிப்பு அதிகமாக இருந்தது. இதனால், மக்கள் நகரங்களில் இருந்து, கிராமங்கள் மற்றும் சிறு நகரங்களுக்கு இடம் பெயர்ந்தனர். தற்போது, இந்த நிலை மாறி, மக்கள் மீண்டும் நகரங்களுக்கு படையெடுக்கத் துவங்கி விட்டனர்.படிப்பு, வேலை, தொழில் என, பல காரணங்களால், மக்கள் … Read more

கர்நாடக சட்டசபை தேர்தலில் 150 தொகுதிகளில் காங்கிரஸ் வெற்றி பெறும் -சித்தராமையா பேட்டி

பெங்களூரு: காங்கிரஸ் மேலிடம் அழைப்பின் பேரில் மாநில தலைவர் டி.கே.சிவக்குமார், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமைய டெல்லியில் முகாமிட்டுள்ளனர். டெல்லியில் ராகுல்காந்தியை சந்தித்து 2 பேரும் பல மணிநேரம் ஆலோசனை நடத்தினார்கள். இந்த நிலையில் டெல்லியில் நேற்று எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா நிருபர்களுக்கு அளித்த பேட்டியின் போது கூறியதாவது:- கர்நாடக சட்டசபை தேர்தலை எதிர்கொள்ள காங்கிரஸ் கட்சி எப்போது வேண்டுமானாலும் தயாராக உள்ளது. சட்டசபை தேர்தலில் கருத்து கணிப்பு குறித்து காங்கிரஸ் கட்சி சார்பில் கருத்து கணிப்பு நடத்தப்பட்டது. … Read more

இந்திய கிரிக்கெட் வீரர் லோகேஷ் ராகுலுக்கு அறுவை சிகிச்சை – ஜெர்மனியில் நடந்தது

புதுடெல்லி, இந்திய கிரிக்கெட் அணியின் தொடக்க வீரரும், துணை கேப்டனுமான லோகேஷ் ராகுல் வயிற்றின் அடிப்பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக அடிக்கடி அவதிப்பட்டு வந்தார். இதனால் அவர் சமீபத்தில் நடந்த தென்ஆப்பிரிக்காவுக்கு எதிரான 20 ஓவர் தொடரில் இருந்து விலகினார். இங்கிலாந்து தொடருக்கான அணியிலும் இடம் பெறவில்லை. இந்த நிலையில் அவரை சிறப்பு சிகிச்சைக்காக இந்திய கிரிக்கெட் வாரியம் ஜெர்மனிக்கு அனுப்பி வைத்தது. அங்குள்ள ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்ட லோகேஷ் ராகுலுக்கு அடிவயிற்று பகுதியில் ஏற்பட்ட காயத்துக்கு அறுவை … Read more

சட்டை இல்லாமல் பார்க்க "கேவலமாக" இருப்பீர்கள் – ஜி-7 மாநாட்டில் கேலி செய்த தலைவர்களுக்கு புதின் பதிலடி!

மாஸ்கோ, ரஷிய அதிபர் விளாடிமிர் புதின் மேல் சட்டையின்றி, வெறும் மார்போடு குதிரை சவாரி செய்யும் புகைப்படம் வெளியாகியது. ரஷிய அதிபர் புதின் ஒரு திறமையான டேக்வாண்டோ பயிற்சியாளர் ஆவார். அவர் பலமான மனிதர் என்பதை காட்டுவதற்காக அவருடைய இது போன்ற புகைப்படங்கள் ரஷிய அதிபர் மாளிகையால் அடிக்கடி வெளியிடப்படும் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த புகைப்படத்தை பார்த்த பின், பிரிட்டிஷ் பிரதமர் போரிஸ் ஜான்சன் மற்றும் கனடா பிரதமர் ஜஸ்டின் ட்ரூடோ இருவரும் புதினைப் பற்றி கேலி … Read more

Priyanka Chopra: பிரியங்கா அக்கா, என்ன இது.. விலை படு பயங்கரமா இருக்கே..!

இந்தியாவின் மிக பிரபலமான நடிகையான பிரியங்கா சோப்ரா, உலக அளவில் பிரபலமான நட்சத்திரமாவார். நடிகை மட்டுமல்ல, சிறந்த தொழிலதிபர் என்றும் கூட கூறலாம். பிரியங்கா சோப்ரா சமீபத்தில் தனது ஹோம்வேர் சேகரிப்பான சோனா ஹோமை அறிமுகப்படுத்தினார். ஜிஎஸ்டி கவுன்சில்: 3 துறைக்கு முக்கிய அறிவிப்பு.. சிறப்பான வரி சலுகை..! இந்த சோனா ஹோமில் உள்ள பொருட்கள் இந்திய பாரம்பரியத்தினை போற்றும் வகையிலும், அழகான பொருட்களாகவும் உள்ளன. இதில் மேஜை மேல் போடப்படும் துணி என பலவும் அடங்கும். … Read more

விண்ணில் பாய்ந்தது பி.எஸ்.எல்.வி-சி53; மூன்று சிங்கப்பூர் செயற்கைகோள்களை நிலைநிறுத்தியது இஸ்ரோ

Anonna Dutt  Isro places 3 Singapore satellites, 6 experiments in orbit in second launch this year: இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வியாழன் அன்று நியூ ஸ்பேஸ் இந்தியா லிமிடெட்டின் வணிகப் பணியில் மூன்று சிங்கப்பூர் செயற்கைக்கோள்களை வெற்றிகரமாக விண்ணில் செலுத்தியது. இஸ்ரோவின் இந்த ஆண்டின் இரண்டாவது ஏவுதல் இதுவாகும், முன்னதாக இஸ்ரோ பிப்ரவரியில் இந்திய புவி கண்காணிப்பு செயற்கைக்கோளை சுற்றுப்பாதையில் நிலைநிறுத்தியது. வணிக செயற்கைக்கோள்களுடன், இஸ்ரோ நிறுவனம் தற்போதைய … Read more

மதுரை.! நடத்தை சந்தேகத்தில் மனைவியை அடித்து கொன்ற கணவர்.!

மதுரை மாவட்டத்தில் நடத்தையில் சந்தேகப்பட்டு மனைவியை கணவர் அடித்து கொன்றுள்ளார். மதுரை மாவட்டம் டி.கல்லுப்பட்டி பகுதியை சேர்ந்தவர் கிருஷ்ணன். இவருடைய மனைவி முருகம்பாள்(40). இவர்கள் இருவரும் தனியார் மில்லில் வேலை பார்த்து வந்தனர். ஆனால் கிருஷ்ணன் கடந்த ஒரு வருடமாக வேலைக்கு செல்லாமல் வீட்டில் இருந்து வந்துள்ளார். இந்நிலையில் மனைவியின் நடத்தையில் சந்தேகப்பட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறு செய்து வந்துள்ளார். இதைத்தொடர்ந்து நேற்று இரவும் கணவன்-மனைவி இடையே ஏற்பட்ட தகராறு முற்றிய நிலையில் ஆத்திரமடைந்த கணவர் இன்று … Read more

“உயர்கல்வி உதவித்தொகைக்கு ஜூலை 10 வரை விண்ணப்பிக்கலாம்” – தமிழக அரசு

உயர்கல்வி உறுதித் திட்டத்தில் உதவித் தொகை பெற மாணவியர் விண்ணப்பிக்கும் காலக்கெடுவை ஜூலை 10 வரை தமிழக அரசு நீட்டித்துள்ளது. பல்தொழில்நுட்பம், கலை அறிவியல், பொறியியல் கல்லூரிகளில் பயிலும் மாணவியர் உயர்கல்வி உறுதித் திட்டத்தில் மாதந்தோறும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை பெற அரசின் இணையத்தளத்தில் ஜூன் 30 வரை விண்ணப்பிக்கலாம் என முன்பு அறிவிக்கப்பட்டிருந்தது. இந்தக் காலக்கெடுவை மேலும் பத்து நாள் நீட்டித்துள்ளதுடன், இது குறித்த தெளிவுரைகளை 14417 என்கிற கட்டணமில்லாத் தொலைபேசி எண்ணுக்குத் தொடர்புகொண்டு தெரிந்துகொள்ளலாம் … Read more

மதுரை திருப்பரங்குன்றத்தில் 1000 ஆண்டுகளுக்கு முந்தைய சமணர் கல்வெட்டு கண்டுபிடிப்பு

மதுரை: திருப்பரங்குன்றம் மலையில் சிக்கந்தர் தர்காவின் பின்புறமுள்ள மலைச்சரிவில் 1000 ஆண்டுகளுக்கு முற்பட்ட சமணத்துறவியர் வடக்கிருந்து உயிர்நீத்த செய்தியை கூறும் கல்வெட்டு ஒன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இக்கல்வெட்டு கிரந்தமும் தமிழும் கலந்து எழுதப்பட்டுள்ளது. இதனைப் பாண்டியநாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் ஆய்வாளர்கள் உதயக்குமார், முத்துபாண்டி, முருகன் ஆகியோர் கண்டுபிடித்துள்ளனர். இக்கல்வெட்டை வாசித்து இவ்விளக்கத்தை பாண்டிய நாட்டு வரலாற்று ஆய்வு மையத்தின் செயலாளர் தொல்லியல் அறிஞர் சாந்தலிங்கம் கூறியதாவது: அரிட்ட நேமிபடாரர் என்னும் சமணத்துறவி சல்லேகனை என கூறப்படும் வடக்கிருந்து … Read more