அனைத்து மதங்களையும் மதித்தால் ஒற்றுமையுடன், அமைதியாக வாழலாம் – ஐ.நா

நியூயார்க், ராஜஸ்தான் மாநிலம், உதய்பூரில் கன்னையா லால் என்பவரை, ரியாஸ் அக்தாரி, கவுஸ் முகமது ஆகியோர் கொலை செய்து, அதை ‘வீடியோ’ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டனர். இதனால், உதய்பூரில் கலவரம் ஏற்பட்டதை அடுத்து, அங்கு ஊரடங்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது. இது பற்றியும், சர்ச்சைக்குரிய கருத்தை சமூக வலைதளத்தில் வெளியிட்ட, ‘தனியார் செய்தி நிறுவனத்தின்’ இணை நிறுவனர் முகமது சுபைர் கைது குறித்தும், ஐ.நா., பொதுச் செயலர் அன்டோனியோ குட்டரசின் செய்தி தொடர்பாளர் ஸ்டீபன் டுஜாரிக் கூறியதாவது:- … Read more

மோடி துவக்கி வைத்த புதிய திட்டம்.. MSME நிறுவனங்களுக்குப் பல நன்மைகள்..!

பிரதமர் நரேந்திர மோடி வியாழக்கிழமை டெல்லியில் உள்ள விஞ்ஞான் பவனில் ‘எம்எஸ்எம்இ செயல்திறனை உயர்த்துதல் மற்றும் துரிதப்படுத்துதல்’ என்னும் RAMP திட்டத்தைத் தொடங்கி வைத்தார். பிரதமர் அலுவலகம் (PMO) வெளியிட்டுள்ள அறிவிப்பின் படி, இத்திட்டம் சுமார் 6,000 கோடி ரூபாய் மதிப்பில் செயல்படுத்த உள்ளதாகத் தெரிகிறது. பொதுத்துறை வங்கிகளை மொத்தமாக கைகழுவ மோடி அரசு திட்டம்..? வங்கி ஊழியர்கள் அதிர்ச்சி..! MSME நிறுவனங்கள் தற்போதுள்ள MSME திட்டங்களின் திறனை மேம்படுத்துவதன் மூலம், ஒவ்வொரு மாநிலங்களில் இருக்கும் நடுத்தரச் … Read more

அணிவகுக்கும் 3 தொடர்கள்: பிரபலங்கள் புடை சூழ அறிவித்த ஜீ தமிழ்

ஜீ தமிழ் தொலைக்காட்சி, கதை சார்ந்த டிவி தொடர்களை ஒளிபரப்புவதில் மிகவும் பிரபலமாகத் திகழ்கிறது. இப்போது பிரதான நேரத்தில் மூன்று முக்கிய தமிழ் தொடர்களை ஒளிபரப்பு செய்யப் போவதாக அறிவித்துள்ளது. இவை அனைத்தும் தமிழ் குடும்ப மகளிரை இதயபூர்வமாக கவரும் கதைக்களம் கொண்டவையாகும்.   அமுதாவும் அன்னலக்ஷ்மியும் மற்றும் மாரி ஆகிய இந்த இரண்டு தொடர்களும் ஜூலை 4-ம் தேதி முதல் ஒளிபரப்பாகிறது.  மூன்றாவது தொடரான மீனாக்ஷி பொண்ணுக என்ற தொடர் ஒளிபரப்பும் தேதி பின்னர் அறிவிக்கப்பட உள்ளது. … Read more

விருதுநகர்.! குளிப்பதற்காக மேல் பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி இளைஞர் பலி.!

விருதுநகர் மாவட்டத்தில் குளிப்பதற்காக மேல் பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி இளைஞர் உயிரிழந்துள்ளார். விருதுநகர் மாவட்டம் சிவகாசியை சேர்ந்தவர் கார்த்திகைமணி. இவர் சிவகாசி கிழக்கு காவல் நிலையத்தில் தலைமைக் காவலராக வேலை பார்த்து வருகிறார். இவரது மகன் முருகப்பன்(19). இவர் சாப்டூர் சதுரகிரி சுந்தர மகாலிங்கம் கோவிலுக்கு சாமி கும்பிடுவதற்காக நண்பர்களுடன் சென்றுள்ளார். அப்பொழுது அங்குள்ள வழுக்குப் பாறை அருகே உள்ள தண்ணீர் கிடக்கில் குழிப்பதற்காக மேற்பகுதியில் இருந்து குதித்த போது பாறையில் மோதி … Read more

அதிமுக பொதுக்குழுவிற்காக மீண்டும் தயாராகும் வானகரம் திருமண மண்டபம்.. 3000 பேர் அமரும் வகையில் பிரமாண்ட செட் அமைக்கப்படுகிறது..!

அதிமுகவில் ஒற்றை தலைமை சர்ச்சைகள் நீடித்துவரும் நிலையில், அடுத்த மாதம் 11 ஆம் தேதி நடைபெறும் பொதுக்குழுவிற்காக வானகரம் ஸ்ரீவாரு மண்டப மைதானத்தில் பிரமாண்ட செட் அமைக்கும் பணிகள் தொடங்கியுள்ளன. சுமார் 3 ஆயிரம் பேர் அமரும் வகையில் இந்த செட் அமைக்கப்படுகிறது. இதற்காக மைதானத்தை தூய்மைப்படுத்தும் பணிகள் தொடங்கியுள்ளன. Source link

டாஸ்மாக் போல வருமானம் தந்தால் வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? – அரசுக்கு உயர் நீதிமன்றம் கேள்வி

சென்னை: டாஸ்மாக் நிறுவனம் போல் வருமானம் தருவதாக இருந்தால், வனத்துறை மீது அக்கறை காட்டுவீர்களா? என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் கேள்வி எழுப்பியுள்ளது. தமிழக வனப் பகுதிகளில் உள்ள அந்நிய மரங்களை அகற்றக் கோரிய வழக்குகள், நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் பரத சக்கரவர்த்தி ஆகியோர் அடங்கிய அமர்வில் இன்று மீண்டும் விசாரணைக்கு வந்தது. அப்போது, வனத்துறை தரப்பில் அறிக்கை தாக்கல் செய்யப்பட்டது. அதில், “சத்தியமங்கலம், முதுமலை சரணாலயங்களில் 1,500 ஹெக்டேர் பரப்புக்கு அந்நிய மரங்கள் … Read more

உலகின் மிகப்பெரிய சாக்லேட் தயாரிக்கும் தொழிற்சாலை முடக்கம்.. நச்சு நுண்ணுயிரிகள் கண்டுபிடிக்கப்பட்டதால் நடவடிக்கை..!

பெல்ஜியத்தில் உள்ள உலகிலேயே மிகப்பெரிய சாக்லெட் தயாரிக்கும் தொழிற்சாலையில் உணவை நச்சுப்படுத்தும் நுண்ணுயிரிகள் கண்டு பிடிக்கப்பட்டுள்ளதால் உற்பத்தி நிறுத்தப்பட்டுள்ளது. அந்த தொழிற்சாலை மிகப்பெரிய அளவில் திரவ சாக்லேட்டுகளை தயாரித்து வந்தது. ஜூன்  25 ஆம் தேதிவரை சப்ளை செய்யப்பட்ட சாக்லெட்டுகளை கடைகளுக்கு அனுப்ப வேண்டாம் என்று அத்தொழிற்சாலை தற்போது தனது டீலர்களை கேட்டுக்கொண்டுள்ளது. மூன்று மாத கால தீவிர ஆய்வுக்கு பின்னரே இந்த தொழிற்சாலையில் மீண்டும் சாக்லேட் தயாரிக்க அனுமதி அளிக்கப்படும் என்று உணவு பாதுகாப்புத்துறை அதிகாரிகள் … Read more

“வணிக சீர்திருத்த திட்டங்களை நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலம் தமிழ்நாடு” – மத்திய அரசு

வணிக சீர்திருத்த திட்டங்களை முறையாக நடைமுறைப்படுத்திய முதன்மையான மாநிலங்களின் பட்டியலில் தமிழ்நாடு இடம்பெற்றுள்ளது. முதலீட்டாளர்களின் நம்பிக்கையை மேம்படுத்துவதற்கும், அரசின் சேவைகளை மக்கள் அணுகுவதற்கும் சீர்திருத்தங்களை மேற்கொண்ட மாநிலங்களின் பட்டியலை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வெளியிட்டார். அந்த பட்டியலில், முதன்மையான மாநிலங்கள் பிரிவில் தமிழ்நாடு, ஆந்திரா, குஜராத், ஹரியானா, கர்நாடகா உள்ளிட்ட 7 மாநிலங்கள் இடம்பெற்றுள்ளன.  Source link

காலில் கட்டு போடும்போது வலியை மறந்து தேசிய கீதம் பாடிய உக்ரைனிய சிறுமி! மனதை உருக்கும் வீடியோ

உக்ரைனைச் சேர்ந்த சிறுமி ஒருவர் காலில் கட்டு போட்டுக்கொண்டு தனது தேசிய கீதத்தைப் பாடுவதைக் காட்டும் இதயத்தை உருக்கும் வீடியோ ஒன்று இணையத்தில் பரவி வருகிறது. இந்த பதிவை உக்ரைனின் உள்நாட்டு விவகார அமைச்சரின் ஆலோசகர் அன்டன் ஜெராஷ்செங்கோ (Anton Gerashchenko) தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அவரது பதிவில், “உடைக்க முடியாதது… உக்ரைன். கட்டு போடும்போது உக்ரேனிய கீதத்தைப் பாடும் சிறுமி” என கூறியுள்ளார். மேலும், அந்த வீடியோவை விக்டர் பஷுலா (Viktor Pashula) என்பவர் … Read more

மகாராஷ்டிராவில் அதிரடி திருப்பம்; முதல்வரானார் ஏக்நாத் ஷிண்டே.! பாஜவின் பட்நவிஸ் துணை முதல்வராக பதவி ஏற்றார்

மும்பை: மகாராஷ்டிராவில் உத்தவ் தாக்கரே அரசு கவிழ்க்கப்பட்ட நிலையில், நேற்று அதிரடி திருப்பங்கள் ஏற்பட்டன. பாஜ.வை சேர்ந்த முன்னாள் முதல்வர் தேவேந்திர பட்நவிஸ் புதிய முதல்வராக பதவியேற்பார் என்று எதிர்பார்க்கப்பட்ட நிலையில், சிவசேனா அதிருப்தி  எம்எல்ஏ.க்கள் அணியின் தலைவரான ஏக்நாத் ஷிண்டே முதல்வராக பதவி  ஏற்றார். பட்நவிஸ் துணை முதல்வராக  பதவியேற்றார். மகாராஷ்டிராவில் காங்கிரஸ், தேசியவாத காங்கிரசுடன் இணைந்து, ‘மகாராஷ்டிரா விகாஸ் அகாடி’ என்ற பெயரில் சிவசேனா கூட்டணி ஆட்சி நடத்தி வந்தது. முதல்வராக இக்கட்சியின் தலைவர் … Read more