சென்னை: தமிழகத்தில் உள்ள அனைத்து முதியோர் இல்லங்களும் கட்டாயமாக பதிவு செய்யப்பட வேண்டும் என்று சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. பதிவு செய்யாத முதியோர் இல்லங்கள் செயல்பட அனுமதிக்க கூடாது என்று உயர்நிதிமன்றம் அறிவித்துள்ளது. தமிழகத்தில் உள்ள முதியோர் இல்லங்களை கண்காணிக்க ஒரு அமைப்பை உருவாக்க கோரி கிருஷ்ணமூர்த்தி என்பவர் தொடர்ந்த வழக்கில் உத்தரவிடப்பட்டுள்ளது.
