வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
புதுடில்லி:கடந்த மே மாதத்தில், நாட்டின் ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் 7.12 சதவீதமாக இருந்தது, ஜூன் மாதத்தில் 7.80 சதவீதமாக உயர்ந்துள்ளது என, இந்திய பொருளாதார கண்காணிப்பு மையம் தெரிவித்துள்ளது.
![]() |
கிராமப்புறங்களில் வேலைவாய்ப்பில் ஏற்பட்டிருக்கும் சரிவால், ஒட்டுமொத்த வேலைவாய்ப்பின்மை விகிதம் அதிகரித்து உள்ளது. நகர்ப்புறத்தை பொறுத்தவரை, வேலைவாய்ப்பின்மை விகிதம் 8.21 சதவீதத்திலிருந்து, 7.30 சதவீதமாக குறைந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
![]() |
இது குறித்து, சமூக மேம்பாட்டு கவுன்சிலின் இயக்குனர் டாக்டர் நித்யானந்த் கூறியதாவது:ஜூன் முதல் அக்டோபர் வரையிலான கரீப் பருவத்தின் விதைப்பு துவங்கும் நேரத்தில், வேலையின்மை அதிகரிப்பது வழக்கமானது தான். அதே சமயம், நகர்ப்புற வேலைவாய்ப்பின்மை குறைந்துள்ளது சாதகமான அம்சமாகும்.இருப்பினும், இன்னும் நாம் கொரோனாவால் ஏற்பட்ட தாக்கங்களிலிருந்து மீளவில்லை என்பதையே ஜூன் மாத நிலவரம் காட்டுகிறது.இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Advertisement