செயற்கை சுழலுக்குள் சிக்கித் தவித்த நமக்கு இயற்கை வழியில் தற்சார்பு வாழ்க்கையை வாழ உணர்த்தியது தக்குணூண்டு இருக்கும் கொரோனா வைரஸ். தற்சார்பு என்பது தமிழர்களின் வாழ்க்கை முறை. அது, குகைகளைவிட்டு வெளியில் வாழத்தலைப்பட்ட ஆதிமனிதனின் வாழ்க்கை முறையும்கூட. ஒவ்வொரு பகுதிக்கும் அங்குள்ள தட்பவெப்பநிலைக்கு ஏற்ற பயிர்களைப் பயிர்செய்து, சூழலுக்கு உகந்த தங்கள் தேவைகளை வாழும் இடத்திலேயே பூர்த்திசெய்து வாழும் இயற்கையோடு இணைந்த ஆரோக்கியமான எளிய வாழ்க்கைதான் அது.

தற்போது வீட்டுத்தோட்டம் பிரபலமாகி வருகிறது. அது தற்சார்பின் ஓர் அடையாளம். சிறுதானியங்கள், இயற்கை விளைபொருள்கள் மீதான ஆர்வம் அதிகமாகிவருகிறது. இது நல்ல ஆரம்பம். இதன் பயன்பாடு அதிகமானால் பன்னாட்டுப் பொருள்களின் தேவை குறைந்து தற்சார்பு மீண்டும் உருவாகும்.
“நாம் அதிகமாகச் செலவழிப்பது உணவு, மருந்து ஆகிய இரண்டுக்கும்தான். ஒரு குடும்பமோ சமூகமோ தற்சார்பாக இருக்கும்போது அவற்றுக்கு இந்த இரண்டின் செலவும் குறையும். இது ஒட்டுமொத்த செலவில் கணிசமான தொகையை சேமிக்க வைக்கும்” என்கிறார் மூத்த சித்த மருத்துவர் மைக்கேல் செயராசு.

தற்சார்பு வாழ்க்கையின் அவசியத்தை, அனுபவத்தை உங்களுக்கு நேரடியாக அளிக்கும் வகையில் அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து ‘நல்வாழ்வு நம் கையில்!’ என்ற தற்சார்பு வாழ்வியல் பயிற்சியை ஆகஸ்ட் 13, 14, 15 ஆகிய தேதிகளில் நடத்துகிறது. சித்த மருத்துவர் மைக்கேல் செயராசுவின் தலைமையில் இந்தப் பயிற்சி நடைபெறவுள்ளது.
திருநெல்வேலி மாவட்டம் மேற்கு மலைத் தொடரில் அமைந்திருக்கும் பாபநாசம் சித்தர் கலைக்கூடத்தில் பயிற்சி நடைபெறவுள்ளது. 3 பகல், 2 இரவுகள் என நடைபெறும் இந்தப் பயிற்சியில் தென்மேற்கு பருவமழையின் சாரலை அனுபவித்தவாறே வாழ்வை நிறைவாக வாழ்வதற்கான விஷயங்களைக் கற்றுக்கொள்ளலாம்.

பயிற்சியில் என்னென்ன சிறப்புகள்?
* தற்சாற்பு வாழ்வியலின் முக்கியத்துவம்
* உடலினை உறுதி செய்யும் மந்திரம்
* நோய்களை விரட்டும் மூலிகைத் தோட்டம் அமைத்தல்
* ஆற்றில் நீராடல்
* நிலாச்சோறு
பயிற்சியில் பங்கேற்க க்ளிக் செய்யவும்.
* யோகா, எளிய உடற்பயிற்சி
* மூலிகை உலா
* அவசர காலத்தில் கைகொடுக்கும் மருந்தில்லா வர்ம மருத்துவம்
* தற்சார்பு வாழ்க்கை – Spot Visit
* பாரம்பர்ய விளையாட்டு
இன்னும் பல ஆச்சர்ய அனுபவங்கள் காத்திருக்கின்றன. பொதிகை மலையும், சலசலத்து ஓடும் ஆறும், மூலிகைகளின் நடுவில் நடைபெறும் பயிற்சியும் நினைவிலிருந்து அழிக்க முடியாத அனுபவங்களைத் தர காத்திருக்கின்றன.

மூன்று நாள்களும் அறுசுவைமிக்க ஆர்கானிக் உணவு வழங்கப்படும்.
கட்டணம் எவ்வளவு?
* நபர் ஒருவருக்கு பயிற்சி, தங்குமிடம், உணவு, Spot Visit என அனைத்துக்கும் சேர்த்து சிறப்பு சலுகைக் கட்டணம் ரூ.6,999 (ஜி.எஸ்.டி உள்பட).
* மூன்று வயதுக்குட்பட்ட குழந்தைகளுக்கு அனுமதி இல்லை.
* மூன்று வயதுக்கு மேற்பட்ட குழந்தைகள் ரூ.3,999 கட்டணம் செலுத்தி பங்கேற்கலாம்.
* பயிற்சிக்கு மொத்தம் 40 இடங்கள் மட்டுமே உள்ளதால் முந்துபவருக்கே முன்னுரிமை அளிக்கப்படும்.

இயற்கையின் வழியில் வாழ்க்கையைத் தொடங்க வேண்டுமா? அவள் விகடன் மற்றும் பசுமை விகடன் இணைந்து நடத்தும் ‘நல்வாழ்வு நம் கையில்’ – தற்சார்பு வாழ்வியல் பயிற்சியில் கலந்துகொள்ளுங்கள்.
முன்பதிவு விவரங்களுக்கு
99400 22128, 97909 90404
பயிற்சியில் பங்கேற்க க்ளிக் செய்யவும்.