விவசாயி வழக்கில் இருவரை காவல்துறையினர் கைது செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திண்டுக்கல் மாவட்டம், ஜாதிக்கவுண்டன்பட்டியை சேர்ந்தவர் உத்தப்பன் (55). இவருக்கு சுப்பம்மாள் என்ற மனைவியும், நாகபாலன் என்ற மகன் மற்றும் முருகேஸ்வரி என்ற மகளும் உள்ளனர். உத்தப்பனுக்கும் அவரது மனைவியின் உறவினரானகொல்லபட்டியை சேர்ந்த மணி மாலாமுருகன் என்பவருக்கும் இடையில் நிலதகராறு இருந்ததாக கூறப்படுகிறது. இதனால், அவர் நிலத்தில் விவசாயம் செய்யாமல் கூலி வேலை செய்து வந்துள்ளார்.
இந்நிலையில், சம்பவதன்று உத்தபன் தோட்டத்தில் கூலி வேலை செய்து விட்டு தனது மொபட்டில் வீட்டுக்கு வந்து கொண்டிருந்தார். அவர வழிமறித்த பாலமுருகன் அவருடன் தகராறில் ஈடுப்பட்டார். ஒரு கட்டத்தில் வாக்குவாதம் முற்றவே மறைத்து வைத்திருந்த அரிவாளால் பால முருகன் உத்தப்பனை வெட்டியுள்ளார். இதில், உத்தபன் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக உயிரிழந்தார். தகவலறிந்து விரைந்து வந்த காவல்துறையினர் அவரின் உடலை மீட்டு பிரேதபரிசோதனைக்காக மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர்மணி மாலாமுருகன் மற்றும் தினேஷ் ஆகிய 2 பேரை கைது செய்து அவர்களிடம் தீவிர விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.