வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்
திருச்சூர்: கேரளாவில் அரசு மருத்துவ கல்லுாரியில் நடந்த இஸ்லாமிய கருத்தரங்கில், மாணவ -மாணவியர் நடுவே திரை அமைக்கப்பட்டது சர்ச்சையைக் கிளப்பியுள்ளது.
கேரளாவில் உள்ள, திருச்சூர் அரசு மருத்துவ கல்லுாரியில் இஸ்லாமிய கருத்தரங்கம் நடந்தது. இதில் பங்கேற்ற மாணவ, மாணவியர் நடுவே திரை போடப்பட்டிருந்தது. திரையால் மாணவர்களும், மாணவியரும் பிரிக்கப்பட்ட படத்தை, கருத்தரங்கு அமைப்பாளரான அப்துல்லா பசில் என்பவர், சமூக வலைதளங்களில் வெளியிட்டு உள்ளார்.
![]() |
![]() |
அத்துடன், ‘இந்தப் படத்தை பார்த்து எரிச்சல்படுவோர், சமூக வலைதளங்களில் தங்கள் எரிச்சலை பகிரட்டும்’ என, அதில் அப்துல்லா தெரிவித்துள்ளார்.
ஆப்கனில் தலிபான் ஆட்சியில் நடப்பது போல, திருச்சூர் மருத்துவ மாணவ, மாணவியரை திரையால் பிரித்த இச்சம்பவம் கேரளாவில் பெரும் சர்ச்சையை கிளப்பியுள்ளது. பல்வேறு அமைப்புகளும் இதற்கு கண்டனம் தெரிவித்து வருகின்றன.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement