ஆற்றில் கூலித்த மாணவர்கள் நீரில் மூழ்கி பலியான சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
தஞ்சாவூர் மாவட்டம், கும்பகோணம் பகுதியில் ஹரிராஜன் என்ற சிறுவன் வசித்து வருகிறார். இவர் அந்த பகுதியில் உள்ள பள்ளியில் 10ம் வகுப்பு படித்து வருகிறார். அவரும் அவரது நண்பர் பிரச்சனாவும் நண்பர்களும் அங்குள்ள திருமலைராஜன் ஆற்றில் குளிக்க சென்றனர். அங்கு அரைகுறையாக வேலைக்கு சென்ற அவர்கள் குளித்து கொண்டிருந்தனர். அப்போது இருவரும் ஆழம் அதிகமுள்ள பகுதிக்கு சென்றனர்.
இருவருக்கும் நீச்சல் தெரியாததால் தண்ணீரில் மூழ்கியுள்ளனர். அதனை கண்ட நண்பர்கள் உறவினர்களுக்கு தகவல் அளித்தனர். தகவலறிந்து விரைந்து வந்த தியாணைப்புதுறையினர் அவர்களின் சடலத்தை மீட்டு பிரேதபரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இந்த சம்பவம் குறித்து வழக்குபதிவு செய்த காவல்துறையினர் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். இந்த சம்பவம் அந்த பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.