பொன்னேரியில் பாயும் ஆரணி ஆற்றில் ஆக்கிரமிப்புகள் அகற்றப்படாமல் பராமரிப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக ஆனந்தன் என்பவர் உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணை இன்று சென்னை உயர் நீதிமன்றத்தில் விசாரணைக்கு வந்தது.
உயர்நீதிமன்ற விசாரணையின் போது நீதிபதி, ஆக்கிரமிப்புகள் என்று தெரிந்தும் அவற்றை அகற்றுவதில் தமிழக அரசுக்கு என்ன சிரமம் உள்ளது. ஒவ்வொரு முறையும் நீதிமன்ற உத்தரவுக்குப் பின்பு தான் ஆக்கிரமிப்புகளை அகற்றுவீர்களா? என்று கேள்வி எழுப்பினார்.
இதற்கு தமிழக அரசு சார்பில் அளிக்கப்பட்ட விளக்கத்தில், “ஆக்கிரமிப்புகள் என்று தெரிந்தால், அவற்றை அகற்றுவதற்கு தமிழக அரசு தயங்குவதில்லை. ஆக்கிரமிப்புகள் அனைத்தும் நோட்டீஸ் பிறப்பிக்கப்பட்டு முறையாக அகற்றப்பட்டு வருவதாக”. தமிழக அரசு சார்பில் விளக்கம் அளிக்கப்பட்டது