ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் ஒரு சூறாவளியைப் போல இணையத்தில் சுழன்று வருகிறது. கண்ணுக்கும் மூளைக்கும் வேலை தருகிற சுவாரசியமான பொழுது போக்கு புதிர்களாக நெட்டிசன்களை ஈர்த்து வருகிறது.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் முதல் பார்வையில் ஒரு மாதிரியாகவும் இரண்டாவது பார்வையில் குழப்பமாகவும் தெரியும். இறுதியில் விடை தெரியும்போது பார்ப்பவர்களை ஆச்சரியத்தில் மூழ்கச் செய்யும்.
ஆப்டிகல் இல்யூஷன் படங்கள் மூளைக்கு நல்ல பயிற்சி அளிக்கக் கூடியவையாக இருக்கிறது. அவை மறைந்திருக்கும் பொருளைக் கண்டுபிடியுங்கள் என்று கூறி உங்கள் கவனத்தை திசை திருப்பிவிட்டு நீங்கள் நினைத்துப் பார்க்க முடியாத இடத்தில் மறைத்து வைத்து நம்மைத் தோற்கடிக்கும்.

இந்த ஆப்டிகல் இல்யூஷன் படம், 29 பொம்மை முயல்களின் தொகுப்பு. முதல் பார்வையில் எல்லா முயல்களும் ஒரே மாதிரி இருப்பதாகத் தோணலாம். ஆனால், இதில் எல்லா முயல் பொம்மைகளுக்கு ஒரு ஒற்றுமை உண்டு. ஒரே ஒரு முயல் மட்டும் வித்தியாசமானது. அந்த வித்தியாசமான் முயல் பொம்மை 15 நொடிகளில் கண்டுபிடிக்க வேண்டும் என்பதுதான் உங்கள் கூர்மையான பார்வைக்கு சவால்.
இன்றைய ஆப்டிகல் இல்யூஷன் படத்தில் வித்தியாசமான தனி முயல் பொம்மையைக் கண்டுபிடித்துவிட்டீர்கள் என்றால் உங்களுக்கு பாராட்டுகள். கண்டுபிடிக்கவில்லை என்றால் உங்களுக்கு உதவி செய்ய உங்களுக்கு ஒரு குறிப்பு தருகிறோம். அந்த முயல் இந்த படத்தின் வலது பக்கத்தில் கீழ்ப் பகுதியில் உள்ளது. இப்போது மீண்டும் படத்தைப் பாருங்கள். முயலைக் கண்டுபிடியுங்கள்.
இப்போதும் கண்டுபிடிக்க முடியவில்லை என்றால் கவலைப்பட வேண்டாம், இதோ உங்களுக்காக விடையைத் தருகிறோம். நிறைய ஆப்டிகல் இல்யூஷன் படங்களைப் பார்த்து பயிற்சி செய்யுங்கள். ஸ்மார்ட்டானவர்களாக இருங்கள்.

“தமிழ் இந்தியன் எக்ஸ்பிரஸின் அனைத்து செய்திகளையும் உடனுக்குடன் டெலிகிராம் ஆப்பில் பெற https://t.me/ietamil“