இலங்கையின் இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்.. அடுத்து என்ன நடக்கும்?

இலங்கையில் நிலவி வரும் பொருளாதார நெருக்கடியால் அந்த நாட்டின் அரசே கவிந்துள்ளது. அடுத்தடுத்து பல அதிர வைக்கும் சம்பவங்கள் அரங்கேறி வருகின்றன.

ஒரு காலகட்டத்தில் ராஜபக்சே குடும்பத்தினை தூக்கி கொண்டாடிய மக்கள், இன்று அதிபர் மாளிகையையே ஆக்கிரமித்துள்ள காட்சிகளை காண முடிகிறது.

இதற்கிடையில் இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சே தனது பதவி ராஜினாமா செய்துள்ளார். இதனையடுத்து இலங்கையில் புதிய பிரதமராக பதவியேற்ற ரணில் விக்கிரமசிங்காவும் பதவியினை ராஜினாமாவை செய்துள்ளார்.

ரஷ்யா – உக்ரைன் போரால் நடந்த சோகம்.. ஐநா அதிர்ச்சி ரிப்போர்ட்..!

ரணில் விக்கிரமசிங்காவின் கருத்து

ரணில் விக்கிரமசிங்காவின் கருத்து

இலங்கை பிரதமர் ரணில் கடந்த மாதம் கடன் பிரச்சனையில் தத்தளித்து வரும் நாட்டில், அன்னிய செலவாணி இல்லாமையால் அத்தியாவசிய பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியவில்லை. இலங்கை திவால் நிலைக்கு தள்ளப்பட்டுவிட்டது. இது இந்தியா மற்றும் சீனா, சர்வதேச நாணய நிதியம் என பலவகையிலும் நிதி உதவிக்காக எதிர்பார்ப்பதாகவும் கூறியிருந்தார்.

சாமானியர்களுக்கு பிரச்சனை

சாமானியர்களுக்கு பிரச்சனை

இப்படி கடுமையான போரட்டங்களுக்கு மத்தியில் இரு பெரும் தலைவர்களும் ராஜினாமா செய்துள்ளனர். மக்கள் எரிபொருள் விலை அதிகம் இருந்தாலும் கூட, அதனை வாங்க பல மணி நேரங்களில் வரிசையில் காத்திருக்க வேண்டிய நிலையில் உள்ளனர். உணவு பொருட்கள் விலையும் பலமான ஏற்றத்தினை கண்டுள்ளது. இதனால் நடுத்தர சாமானிய மக்கள் பெரும் நெருக்கடியினை எதிர் கொண்டுள்ளனர்.

எவ்வளவு மோசமானது?
 

எவ்வளவு மோசமானது?

ஏற்கனவே 50 பில்லியன் டாலருக்கும் அதிகமான கடனை கொண்டுள்ள இலங்கை, வாங்கிய கடனுக்கு வட்டியை செலுத்த முடியாமல் தவித்து வருகின்றன. 2019ம் ஆண்டுக்கு பிறகு கொரோவின் வருகையால், இலங்கையின் முக்கிய வாழ்வாதாரமான சுற்றுலா என்பது மிக மோசமாக பாதிக்கப்பட்டது. இதற்கிடையில் இலங்கை நாணயத்தின் மதிப்பானது 80% சரிவினைக் கண்டது. இது இறக்குமதியில் சிக்கலை ஏற்படுத்தியது. இது பணவீக்கத்தினை மேலும் மோசமாக்கியது. இது ஏற்கனவே கட்டுபாடின்றி கடினமாக உயர்ந்து வந்த நிலையில், இது இன்னும் நிலைமையை மோசமாக்கியுள்ளது.

திவால் நிலை

திவால் நிலை

இதன் விளைவாக பெட்ரோல், பால், சமையல் எரிவாயு, கழிப்பறை காகிதங்கள் என அடிப்படை பொருட்களை கூட இறக்குமதி செய்ய முடியாமல் திவால் நிலைக்கு தள்ளப்பட்டுள்ளது இலங்கை.

இதற்கு பொருளாதாரம் சரிவு என்பதும் ஒரு காரணமே என்றாலே, அரசியல் ஊழலும் ஒரு காரணம் என கூறப்படுகிறது. இது நாட்டின் பணத்தினை வீணடித்துள்ளதோடு, நீதி மீட்பும் செய்யவில்லை.

மக்களை எவ்வாறு பாதிக்கிறது?

மக்களை எவ்வாறு பாதிக்கிறது?

பொதுவாக உணவு பற்றாக்குறை இல்லை. ஆனால் மக்கள் பசியுடன் மக்கள் இருக்கிறார்கள். ஆய்வின் படி 10 குடும்பங்களில் 9 குடும்பங்களில் உணவை தவிர்க்கின்றனர். உணவுக்காக மனிதாபிமான உதவியை பெறுகின்றனர். முக்கியமான மருத்துவ உபகரணங்கள் மற்றும் மருந்து பொருட்களை பெற மருத்துவர்கள் சமூக ஊடங்களை நாடி வருகின்றனர். இலங்கையர்களின் எண்ணிக்கையானது வேலை தேடி வெளிநாடு செல்ல திட்டமிடுகின்றனர். அரசு ஊழியர்களுக்கு கூடுதல் விடுமுறை அளிக்கப்பட்டு, உணவுப் பொருட்களை உற்பத்தி செய்ய கால அவகாசம் வழங்கப்பட்டது.

ஏன் இவ்வளவு மோசம்?

ஏன் இவ்வளவு மோசம்?

பல ஆண்டுகளாக தவறான நிர்வாகம் மற்றும் ஊழல் போன்ற உள்நாட்டு காரணிகளால் இந்த நெருக்கடி உருவாகியுள்ளது என பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர்.

இதன் காரணமாக ஜனாதிபதி மற்றும் பிரதமர் மீது கோபம் அதிகரித்துள்ளது. இதுவே கடும் பொருளாதார சரிவுக்கு வழிவகுத்துள்ளது.

பொருளாதாரம் சரிந்து விட்டது என பிரதமர் ஏன் கூறினார்?

பொருளாதாரம் சரிந்து விட்டது என பிரதமர் ஏன் கூறினார்?

ஆறாவது முறையாக பிரதமராக இருக்கும் விக்கிரமசிங்க ஜூன் மாதம் செய்த அப்பட்டமான பிரகடனம் பொருளாதாரத்தின் நிலை மீதான நம்பிக்கையையும் குறைமதிப்பிற்கு உட்படுத்துவதாக அச்சுறுத்தியது. எந்த குறிப்பிட்ட புதிய அபிவிருத்தியையும் பிரதிபலிக்கவில்லை. சர்வதேச நாணய நிதியத்தின் உதவியை நாடியுள்ளது. அதோடு பதவியேற்றதில் இருந்து பல விமர்சனங்களை எதிர்கொண்டிருந்தார்.

கையிருப்பு

கையிருப்பு

இலங்கையின் கையிருப்பில் வெறும் 25 மில்லியன் டாலர் மட்டுமே உள்ள நிலையில், கடனை திரும்பி செலுத்த முடியாமல் தவித்து வருகின்றது. இந்த ஆண்டில் 7 பில்லியன் டால வெளி நாட்டுக் கடனை திருப்பிச் செலுத்துவதை இலங்கை இடை நிறுத்தியுள்ளது.

அரசின் நிலை இது தான்

அரசின் நிலை இது தான்

இதற்கிடையில் இந்த நெருக்கடியான நிலையில் அரசு பல்வேறு முயற்சிகளை எடுத்து வந்தது. எனினும் போதிய உதவிகள் கிடைக்காத நிலையில் அரசு கடினமாக பிரச்சனைகளை எதிர்கொண்டு வந்தது. இதற்கிடையில் தான் பல்வேறு மோசமான சம்பவங்களும் அரங்கேறி வருகின்றன. எனினும் தற்போதைக்கு இலங்கைக்கு எரிபொருள், உணவு பொருட்கள், மருத்துவ பொருட்கள் என பலவும் அவசர உதவிக்காகவும், அன்னிய செலவாணியை அதிகரிக்க வேண்டிய நிலையிலும் அரசு உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க

Read more about: sri lanka இலங்கை

English summary

Why has Sri Lanka’s economy deteriorated to such a bad level?

Why has Sri Lanka’s economy deteriorated to such a bad level?/இலங்கையின் இந்த மோசமான நிலைக்கு என்ன காரணம்.. அடுத்து என்ன?

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.