நீங்கள் ஒரு ஏடிஎம் மையத்திற்கு சொந்தமாக வேண்டுமா? மாதம் ரூ.80,000 சம்பாதிக்க இதோ ஒரு வழி!

இந்திய இளைஞர்கள் தற்போது சுய தொழில் செய்வதில் மிகுந்த ஆர்வம் கொண்டு வரும் நிலையில் பொதுத் துறை வங்கியான எஸ்பிஐ ஏடிஎம் நிறுவி அதன் மூலம் வருமானம் பெறலாம்.

எஸ்பிஐ ஏடிஎம் நிறுவுவதன் மூலம் மாதம் ரூபாய் 80 ஆயிரம் சம்பாதிக்க வாய்ப்பு உள்ளது என்பதும் இது ஒரு பாதுகாப்பான தொழில் என்பதும் குறிப்பிடத்தக்கது.

எஸ்பிஐ ஏடிஎம் நிறுவி அதிக பணம் சம்பாதிப்பது எப்படி என்பது குறித்து தற்போது பார்ப்போம்.

அதிபர் மாளிகையை கைப்பற்றிய இலங்கை மக்கள்.. இனியும் IMF உதவி கரம் நீட்டுமா?

ஏடிஎம் இயந்திரம்

ஏடிஎம் இயந்திரம்

இந்தியாவில் உள்ள எந்த ஒரு வங்கியும் ஏடிஎம் இயந்திரங்களை வங்கியின் சார்பில் நிறுவப்படுவதில்லை. தனியார் நிறுவனங்களிடம் ஒப்பந்தம் செய்து அந்த நிறுவனங்கள்தான் ஏடிஎம் இயந்திரங்களை நிறுவி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.

 

எளிதாக சம்பாதிக்கலாம்

எளிதாக சம்பாதிக்கலாம்

இந்த நிலையில் ஏடிஎம் உரிமையை நாமும் பெறுவதன் மூலம் ஒவ்வொரு மாதமும் அதிகமாக சம்பாதிக்கலாம். அந்த வகையில் இந்தியாவில் எந்த இடத்தில் வேண்டுமானாலும் எஸ்பிஐ ஏடிஎம் உரிமையை பெறுவதன் மூலம் மிக எளிதாக எப்படி சம்பாதிக்கலாம் என்பதை பார்ப்போம்.

எஸ்பிஐ ஏடிஎம்
 

எஸ்பிஐ ஏடிஎம்

முதலில் எஸ்பிஐ ஏடிஎம் நிறுவுவதற்கு சில நிபந்தனைகள் வங்கிகளால் விதிக்கப்பட்டுள்ளது. அந்த நிபந்தனைகள், தேவையான ஆவணங்கள் குறித்து தற்போது பார்ப்போம். முதலில் எஸ்பிஐ ஏடிஎம் நிறுவுவதற்கு சில முக்கிய ஆவணங்கள் தேவை. அந்த ஆவணங்களின் விபரங்கள் இதோ:

1. அடையாளச் சான்று
2. முகவரிச் சான்று
3. வங்கி கணக்கு மற்றும் பாஸ்புக்
4. புகைப்படம், இமெயில் ஐடி, மொபைல் எண்
5. பிற ஆவணங்கள்
6. ஜிஎஸ்டி எண்
7. நிதி ஆவணங்கள்

மேற்கண்ட ஆவணங்களில் அடையாள சான்றுக்கு ஆதார் அட்டை அல்லது பான் கார்டு பயன்படுத்தலாம். அதேபோல் முகவரி சான்றுக்கு ரேஷன் கார்டு, மின்சார பில் ஆகியவற்றை பயன்படுத்தலாம்.

விண்ணப்பம் செய்வது எப்படி?

விண்ணப்பம் செய்வது எப்படி?

எஸ்பிஐ ஏடிஎம் உரிமத்தை பெற விரும்பும் நபர்கள் எஸ்பிஐ வங்கியின் அதிகாரப்பூர்வமான இணைய தளத்திற்கு சென்று விண்ணப்பம் செய்யலாம். டாடா இண்டிகேஷ், முத்தூட் ஏடிஎம் மற்றும் இந்தியா ஒன் ஏடிஎம் ஆகிய நிறுவனங்கள் இந்தியாவில் ஏடிஎம் நிறுவும் ஒப்பந்தங்களை பெற்றுள்ளது. இந்த நிறுவனங்களின் இணைய தளங்களில் ஆன்லைனில் சென்று ஏடிஎம் மையம் நிறுவ விண்ணப்பம் செய்யலாம்.

எவ்வளவு முதலீடு தேவை?

எவ்வளவு முதலீடு தேவை?

எஸ்பிஐ ஏடிஎம் நிறுவுவதற்கு மொத்தம் ஐந்து லட்ச ரூபாய் தேவைப்படும். அதில் இரண்டு லட்ச ரூபாய் பாதுகாப்பு வைப்பு தொகை செலுத்த வேண்டும். மீதமுள்ள 3 லட்ச ரூபாயை மூலதனமாக டெபாசிட் செய்ய வேண்டும்.

வருமானம் எவ்வளவு?

வருமானம் எவ்வளவு?

ஏடிஎம் மையம் நிறுவுவதன் மூலம் ஒருபண பரிவர்த்தனைக்கு 8 ரூபாய் என்றும் பணம் இல்லாத பிரார்த்தனைக்கு 2 ரூபாய் என்றும் கமிஷன் கிடைக்கும். நீங்கள் நிறுவும் ஏடிஎம் மையம் மூலம் தினசரி 250 பரிவர்த்தனை நடந்தால் அதன் மூலம் கமிஷன் மட்டும் ரூபாய் 45 ஆயிரம் முதல் 50 ஆயிரம் வரை கிடைக்கும் என்பது குறிப்பிடத்தக்கது. பரிவர்த்தனை அதிகரித்தால் வருமானமும் அதிகரிக்கும். அதாவது ஒரு நாளைக்கு 500 பரிவர்த்தனைகளாக உயர்த்தினால், மாதத்திற்கு ரூ.90,000 அல்லது அதற்கு மேல் சம்பாதிக்கலாம்.

அடிப்படை தேவைகள்

அடிப்படை தேவைகள்

* ஏடிஎம் 50 முதல் 80 சதுர அடி வணிக இடத்தில் வைக்கப்பட வேண்டும்.

* உங்கள் ஏடிஎம் இருப்பிடத்திலிருந்து 100 மீட்டருக்குள் வேறு எந்த வங்கி ஏடிஎம்களும் இருக்கக்கூடாது.

* ஏடிஎம் நிறுவப்படும் இடம் பாதுகாப்பான இடமாகவும், தரை தளத்திலும் இருக்க வேண்டும்.

* மின் இணைப்பு குறைந்தபட்சம் 1 KW மதிப்பீட்டில் இருக்க வேண்டும் மற்றும் 24 மணிநேர தடையில்லா மின்சாரம் வழங்கப்பட வேண்டும்.

* ஒரு நாளைக்கு குறைந்தது 300 அல்லது அதற்கு மேற்பட்ட பரிவர்த்தனைகளுக்கு நீங்கள் உத்தரவாதம் அளிக்க வேண்டும்.

* ஏடிஎம் மையத்தின் பாதுகாப்பை உறுதி செய்ய கான்கிரீட் கூரை இருக்க வேண்டும்.

பயிற்சி

பயிற்சி

உங்களின் உரிமை விண்ணப்பத்தைப் பெற்ற உடனேயே, எஸ்பிஐ ஃபிரான்சைஸ் குழு உங்களைத் தொடர்பு கொள்ளும். உங்கள் விவரங்களை சரிபார்த்த பிறகு, எந்த ஏடிஎம் நிறுவ வேண்டும் என்பதை எஸ்பிஐ உங்களுக்கு அறிவுறுத்தும். அதன் பிறகு எஸ்பிஐ ஏடிஎம் இயந்திரத்தில் பணம் வைக்கப்படுவது எப்படி? பணத்தை கையாளுவது எப்படி என உங்களுக்கு பயிற்சி அளிக்க்கப்படும். கார்டு சிக்குவது, ஏடிஎம்களை மறுதொடக்கம் செய்வது போன்ற சிறிய குறைபாடுகள் ஏற்பட்டால், முதல் நிலை பராமரிப்பு நடைமுறைகள் ஆகியவை கற்று கொடுக்கப்படும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

How the process to apply for SBI ATM Franchise? Full Details!

How the process to apply for SBI ATM Franchise? Full Details! | நீங்கள் ஒரு ஏடிஎம் மையத்திற்கு சொந்தமாக வேண்டுமா? மாதம் ரூ.80,000 சம்பாதிக்க இதோ ஒரு வழி

Story first published: Monday, July 11, 2022, 12:38 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.