புதிய வரலாற்று சரிவை தொட்ட ரூபாய் மதிப்பு.. ஓரே நாளில் 22 பைசா சரிவு.. இனி 80 தானா..?

திங்களன்று அமெரிக்க டாலருக்கு எதிராக இந்திய ரூபாயின் மதிப்பு 22 பைசா குறைந்து புதிய வரலாற்றுச் சரிவான 79.48 ஆக நிறைவடைந்தது, இன்றைய சரிவுக்கு மிக முக்கியமான காரணமாக அமெரிக்க டாலரின் அதிகப்படியான டிமாண்ட் மற்றும் இந்தியச் சந்தையில் இருந்து முதலீடுகள் தொடர்ந்து வெளியேற்றம் தான்.

இருப்பினும், சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலை குறைந்து வருவதால், ரூபாயின் மதிப்பின் சரிவு பெரிய அளவில் கட்டுப்படுத்தப்பட்டு உள்ளதாக அந்நிய செலாவணி வர்த்தகர்கள் தெரிவித்துள்ளனர்.

வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலாவணி சந்தையில், அமெரிக்க டாலருக்கு எதிரான இந்திய ரூபாயின் மதிப்பு 79.30 ரூபாய் என்ற பலவீனமாகத் தொடங்கியது மற்றும் இன்ட்ரா-டேவில் அதிகப்படியாக 79.24 ரூபாயும், குறைவான அளவில் 79.49 ரூபாய் அளவிலும் உள்ளது.

4 வங்கிகளில் பணம் எடுக்க கட்டுப்பாடு.. ரிசர்வ் வங்கி அதிரடி உத்தரவு..!

டாலர் - ரூபாய் மதிப்பு

டாலர் – ரூபாய் மதிப்பு

இன்றைய வர்த்தக நேர முடிவில் டாலருக்கு எதிரான ரூபாய் மதிப்பு இறுதியாக 79.48 இல் நிலைபெற்றது, அதன் முந்தைய முடிவான 79.26 ஐ விட 22 பைசா சரிந்தது. சர்வதேச சந்தையில் ஆறு முக்கிய நாணயங்களின் பேஸ்க்ட்-க்கு எதிராக அமெரிக்க டாலரின் வலிமையை அளவிடும் டாலர் குறியீடு, 0.56 சதவீதம் அதிகரித்து 107.60 ஆக இருந்தது.

சென்செக்ஸ், நிஃப்டி

சென்செக்ஸ், நிஃப்டி

உள்நாட்டு ஈக்விட்டி சந்தை முன்னணியில், பிஎஸ்இ சென்செக்ஸ் 86.61 புள்ளிகள் அல்லது 0.16 சதவீதம் குறைந்து 54,395.23 ஆக முடிந்தது, அதே நேரத்தில் என்எஸ்இ நிஃப்டி 4.60 புள்ளிகள் அல்லது சதவீதம் சரிந்து 0.03 ஆக இருந்தது.

FII முதலீட்டாளர்கள்
 

FII முதலீட்டாளர்கள்

அந்நிய நிறுவன முதலீட்டாளர்கள் வெள்ளியன்று மூலதனச் சந்தையில் பெருமளவில் விற்பனையாளர்களாக இருந்தனர். வெள்ளிக்கிழமை வர்த்தகத்தில் மட்டும் சுமார் 109.31 கோடி ரூபாய் மதிப்புள்ள பங்குகளை விற்றுள்ளனர்.

முதலீடுகள் வெளியேற்றம்

முதலீடுகள் வெளியேற்றம்

டாலரின் நிலையான மதிப்பு மற்றும் அமெரிக்காவில் வட்டி விகிதங்கள் அதிகரித்து வருவதால் வெளிநாட்டு முதலீட்டாளர்கள் இந்த மாதம் இதுவரை ரூ.4,000 கோடிக்கு மேல் தங்களது முதலீட்டை இந்திய சந்தையில் இருந்து வெளியேற்றியுள்ளனர். இருப்பினும், கடந்த சில வாரங்களாக வெளிநாட்டு போர்ட்ஃபோலியோ முதலீட்டாளர்களின் (FPIs) விற்பனையின் வேகம் குறைந்து வருகிறது.

அதிமுக கட்சிக்கு எத்தனை கோடி சொத்து இருக்கு தெரியுமா?

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Rupee recorded new low of 79.48 against US dollar; Fall 22 paise today

Rupee recorded new low of 79.48 against US dollar; Fall 22 paise today புதிய வரலாற்றுச் சரிவை அடைந்த ரூபாய் மதிப்பு..!

Story first published: Monday, July 11, 2022, 17:57 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.