லங்கா ஐஓசியால் 100 எரிபொருள் தாங்கிய பவுசர்கள் நேற்று (10) நாடு முழுவதிலுமுள்ள எரிபொருள் நிலையங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளன.
நேற்று (10) 1.5 மில்லியன் லீற்றருக்கும் அதிகமான பெற்றோல் மற்றும் டீசல் அடங்கிய 100 பவுசர்கள் அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாக லங்கா இந்தியன் ஒயில் நிறுவனம் தெரிவித்துள்ளது.
திருகோணமலை டெர்மினல் விரைவில் திறக்கப்படுவதன் மூலம் ஒரு நிலையான சேவை உறுதிப்படுத்தப்படும் என லங்கா ஐஓசி யின் முகாமைத்துவப் பணிப்பாளர் மனோஜ் குப்தா தெரிவித்தார்.
மேலும் அம்புலன்ஸ் சேவையை இடைநிறுத்த முடியாது எனவும், அவற்றுக்கு முன்னுரிமை அடிப்படையில் எரிபொருள் வழங்கப்படும் என்பதனையும், அதற்க்காக பொதுமக்கள் தமது ஒத்துழைப்பினை வழங்க வேண்டும் எனவும் பொதுமக்களிடம் அவர் கேட்டுக் கொண்டார்.