வரதட்சணைக்காக மனைவியை கொலை செய்த கணவனை காவல்துறையினர் கைது செய்தனர்.
சேலம் மாவட்டம், ரெட்டிபகுதியை சேர்ந்தவர் தனுஸ்ரீயா. இவருக்கு கீர்த்திராஜ் என்பவருடன் திருமணம் நடைபெற்றது. இதனை அடுத்து, கடந்த மாதம் அவர் தனுஸ்ரீயா தற்கொலை செய்து கொண்டதாக காவல்துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதனை அடுத்து, இந்த்ன சம்பவம் குறித்து காவல்துறையினர் வழக்குபதிவு செய்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். முதற்கட்ட விசாரணையில் கீர்த்திராஜ் கொலை செய்துவிட்டு நாடகமாடியது தெரியவந்தது.
விசாரணையில், கணவன் மனைவிக்கிடையே அடிக்கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. மேலும், கீர்த்திராஜ் மற்றும் அவரது பெற்றோர் தனுஸ்ரீயாவிடம் வரதட்சணை கேட்டு கொடுமை செய்து வந்துள்ளனர். இதுகுறித்து கோட்டாச்சியர் விசாரணை மேற்கொண்டனர். அதில், தனுஸ்ரீயா வரதட்சணை கேட்டு கொலை செய்தது உறுதியானது. கீர்த்திராஜ், அவரது பெற்றோரை காவல்துறையினர் கைது செய்தனர்.