புதுடெல்லி: கொரோனா வைரஸ் பல்வேறு விதமாக உருமாற்றம் அடைந்து உலக மக்களை அச்சுறுத்தி வருகிறது. இந்த வைரஸ் பற்றி தொடர்ந்து ஆய்வுகள் நடத்தப்பட்டு வருகிறது. ஒவ்வொரு ஆய்விலும் ஒவ்வொரு அதிர்ச்சியூட்டும் தகவல்கள் வெளியாகி வருகிறது. அதன்படி, ‘அப்ளைடு அண்ட் என்விரான்மென்டல் மைக்ரோபயாலஜி’ இதழில் சமீபத்தில் ஒரு ஆய்வறிக்கை வெளியிடப்பட்டு உள்ளது. அதில், வீடுகள், கடைகளில் பயன்படுத்தப்படும் பிரிட்ஜ், பிரீசர்களில் வைத்து பாதுகாக்கப்படும் இறைச்சி, மீன்களில் 30 நாட்கள் வரையில் கொரோனா வைரஸ் உயிர் வாழும்,’ என்ற அதிர்ச்சி தகவல் வெளியிடப்பட்டு இருக்கிறது.
