சென்னையில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க டெண்டர்! மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி தகவல்

சென்னை: சென்னையில் 3 இடங்களில் மேம்பாலம் அமைக்க டெண்டர் விடப்படும் என சென்னை மாநகராட்சி ஆணையர் ககன்தீப் சிங் பேடி கூறினார்.

சென்னையை சிங்காரச்சென்னை 2.0 ஆக மாற்றும் முயற்சியில் திமுக அரசு ஈடுபட்டு வருகிறது. அதற்கான பணிகளை மேற்கொண்டு வருகிறது. சென்னையில் மழை நீர் தேங்காதவாறு, நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில், சென்னையில்,  போக்கு வரத்து நெரிசல் அதிகம் காணப்படும் பகுதிகளில் மேம்பாலங்கள் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகின்றன.

இதுதொடர்பாக சட்டப்பேவையில் பேசிய நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சர் கே.என்.நேரு ரூ.73.84 கோடி மதிப்பில் புதியதாக 3 மேம்பாலம் அமைக்கப்படும் என கூறியிருந்தார். அதன்படி, தண்டையார்பேட்டை மண்டலம், வார்டு-41, மணலி சாலையில் ரெயில்வே சந்திக்கும் இடத்தில்  மேம்பாலம் அமைக்க திட்டமிடப்பட்டுள்ளது. அண்ணா நகர் மண்டலம், வார்டு-98, ஓட்டேரி நல்லாவின் குறுக்கே ஆஸ்பிரன் கார்டன் 2-வது தெரு மற்றும் கீழ்பாக்கம் தோட்டம் தெரு இணைத்து அமைந்துள்ள பாலத்தை இடித்துவிட்டு புதியதாக பாலம் அமைக்கும் பணி மற்றும் ஆலந்தூர் மண்டலம், வார்டு-161ல் ஆதம்பாக்கம் ஏரிக்கால்வாயின் குறுக்கே ஜீவன் நகர் 2-வது தெரு மற்றும் மேடவாக்கம் பிரதான சாலையை இணைத்து பாலம் அமைக்க முடிவு செய்யப்பட்டது.

இந்த 3 மேம்பால பணிக்கு ஒப்பந்தம்  கோரப்பட்டுள்ளது என மாநகராட்சி ஆணையாளர் ககன்தீப்சிங் பேடி தெரிவித்து உள்ளார்.  இப்பணிகள் முடிவுற்றால் மாநகரின் மேற் குறிப்பிட்ட பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் வெகுவாக குறையும் என தெரிவித்துள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.