துணை ஜனாதிபதி தேர்தல்: எதிர்க்கட்சிகளின் வேட்பாளராக மார்கரெட் ஆல்வா தேர்வு – யார் இவர்?!

ஜனாதிபதி தேர்தல் நாளை நடக்கவிருக்கும் நிலையில், துணை ஜனாதிபதி பதவிக்கான தேர்தல் ஆகஸ்ட் 6-ம் தேதி நடக்கிறது. இந்தத் தேர்தலுக்கு தேசிய ஜனநாயகக் கூட்டணி சார்பாக ஜெகதீப் தன்கர் வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருக்கிறார். மேற்கு வங்க ஆளுநரான ஜெக்தீப் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்தவர் ஆவார். ராஜஸ்தான் சட்டமன்றத் தேர்தலை கருத்தில்கொண்டு பா.ஜ.க சார்பாக ஜெக்தீப் துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக அறிவிக்கப்பட்டிருப்பதாகக் கூறப்படுகிறது. ஜெக்தீப், மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜியுடன் கடுமையாக மோதல் போக்கை கடைப்பிடித்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் எதிர்க்கட்சிகள் சார்பில் காங்கிரஸ் மூத்த தலைவர் மார்கரெட் ஆல்வாவை தங்களது துணை ஜனாதிபதி வேட்பாளராக அறிவித்திருக்கின்றன.

மார்கரெட் ஆல்வா

டெல்லியில் நடந்த எதிர்க்கட்சிகள் கூட்டத்தில் இதற்கான முடிவு எடுக்கப்பட்டது. கூட்டத்துக்குப் பிறகு தேசியவாத காங்கிரஸ் தலைவர் சரத் பவார் இதனை தெரிவித்தார். இந்தக் கூட்டத்தில் காங்கிரஸ், திரிணாமுல் காங்கிரஸ், சமாஜ்வாடி, ராஷ்ட்டிரிய ஜனதா தளம், சிவசேனா, தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் கலந்துகொண்டன. 16 எதிர்க்கட்சிகள் சேர்ந்து துணை ஜனாதிபதிக்கான வேட்பாளரை முடிவு செய்துள்ளதாக சரத் பவார் தெரிவித்தார். வரும் செவ்வாய்கிழமை மார்கரெட் ஆல்வா வேட்புமனுவை தாக்கல்செய்வார் என்றும் அவர் அறிவித்தார். துணை ஜனாதிபதி தேர்தலுக்கு வேட்புமனு தாக்கல்செய்ய இந்த மாதம் 19-ம் தேதி கடைசி நாளாகும். துணை ஜனாதிபதிக்கான வேட்பாளராக தன்னை தேர்வு செய்ததற்கு நன்றி தெரிவித்துள்ள மார்கரெட் ஆல்வா, தன்னை வேட்பாளராக தேர்வு செய்தது தனது பாக்கியம் என்று ட்விட்டர் பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார்.

சரத் பவார்

யார் இதை மார்கரெட் ஆல்வா?

மார்கரெட் ஆல்வா நான்கு முறை ஆளுநராக இருந்துள்ளார். அதோடு மத்திய அமைச்சராகவும், ஐந்து முறை எம்.பி-யாகவும் இருந்து அனுபவப்பட்டவர். கடைசியாக உத்தரகாண்டில் ஆளுநகராக இருந்த மார்கரெட் ஆல்வா மறைந்த முன்னாள் பிரதமர் ராஜீவ் காந்தி அமைச்சரவையில் மத்திய அமைச்சராக இருந்துள்ளார். 77 வயதாகும் மார்கரெட் ஆல்வா 1942-ம் ஆண்டு கர்நாடகா மாநிலம், மங்களூரில் பிறந்தவர் ஆவார். கோவா, ராஜஸ்தான், குஜராத் மாநிலத்திலும் ஆளுநராக இருந்திருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.