பெங்களூரு : ”மாநிலம் முழுதும் சட்ட விரோதமாக டியூஷன் சென்டர், கோச்சிங் வகுப்புகள் நடந்து வருகின்றன. இதை கட்டுப்படுத்த வேண்டும்,” என அரசு நிதியுதவி பெறாத தனியார் பள்ளிகளின் நிர்வாக கூட்டமைப்பு சங்கம், முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் வேண்டுகோள் விடுத்தது.3
இது குறித்து, சங்கம் சார்பில் முதல்வர் பசவராஜ் பொம்மையிடம் அளித்த மனு:கர்நாடக கல்வி சட்டம் — 1983ன் விதிமுறை 4, இலவச மற்றும் கட்டாய கல்வி உரிமை சட்டம் — 2009ன் விதிமுறை 18ன் படி, அங்கீகாரம் பெறாத எந்த பள்ளி, கல்லுாரி வகுப்பறைகள் அல்லது அந்த பள்ளிகளின் ஊழியர்கள், டியூஷன் வகுப்புகள் நடத்தக்கூடாது. ஒரு வேளை நடத்த வேண்டுமானால், கல்வித்துறையின் அங்கீகாரம் பெற வேண்டும்.ஆனால் மாநிலம் முழுதும், ஆயிரக்கணக்கான டியூஷன் மையங்கள், கோச்சிங் சென்டர்கள் அரசின் அங்கீகாரம் இல்லாமல், கல்வித்துறை விதிகளை பின்பற்றாமல் நடந்து வருகிறது.பள்ளி, கல்லுாரி கட்டணத்தை விட, டியூஷன் கட்டணமே அதிகமாக உள்ளது.
உபகரணங்கள், துாய்மை, சுத்தமான குடிநீர், விளையாட்டு, கலாச்சார நிகழ்வுகள் என எதற்கும் வாய்ப்பளிக்காமல், காலை 7:00 மணி முதல் மாலை வரை சிறார்களை பிடித்து வைத்து, கல்வி பெயரில் மோசடி நடக்கிறது.இதுபோன்ற டியூஷன் மையங்கள், கோச்சிங் சென்டர்களை கட்டுப்படுத்த வேண்டிய, கல்வித்துறை அதிகாரிகள் சில பிரபலமான டியூஷன் மையங்களின், ‘கவனிப்பு’க்கு மயங்கி மவுனமாக உள்ளனர்.முக்கியமான கல்வி நிறுவனங்களின், வளாகத்திலேயே பகிரங்கமாக டியூஷன் வகுப்புகள் நடத்தப்படுகின்றன. இக்கல்வி நிறுவனங்களில் பணியாற்றும் ஆசிரியர்கள், டியூஷனுக்கும் பயன்படுத்தப்படுகின்றனர். அரசுக்கும் வரி செலுத்தாமல், மோசடி செய்கின்றனர். இதை கட்டுப்படுத்த வேண்டும்.இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement