தேசிய பங்குச் சந்தையின் (என்எஸ்இ) புதிய எம்டி மற்றும் சிஇஓவாக ஆஷிஷ் சௌஹான் பொறுப்பேற்பார் என செபி அறிவித்துள்ளது.
என்எஸ்-க்கு இதுகுறித்து அனுப்பிய கடிதத்தில், சவுகான் ஐந்தாண்டு காலத்திற்கு அந்த பொறுப்பில் இருப்பார் என அறிவிக்கப்பட்டுள்ளது.
இவரது தலைமையின் கீழ் என்எஸ்இ மிக சிறப்பாக செயல்படும் என்றும், சமீபத்தில் ஏற்பட்ட பிரச்சனைகளை இவர் சரி செய்வார் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.
ஆஷிஷ் சௌஹான்
ஆஷிஷ் சௌஹான் தற்போது பிஎஸ்இயின் எம்டி மற்றும் சிஇஓவாக உள்ளார். பிஎஸ்இ தலைவராக அவர் பொறுப்பேற்ற பிறகு, எக்ஸ்சேஞ்ச் மற்றும் அதன் துணை நிறுவனமான சிடிஎஸ்எல், மிகப்பெரிய டெபாசிட்டரி, வெற்றிகரமான ஐபிஓக்களை அறிமுகப்படுத்தினார். மேலும் பிஎஸ்இ நற்பெயரை மேம்படுத்தினார் என வணிக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

என்எஸ்இ எம்டி மற்றும் சிஇஓ
சௌஹானின் நியமனம் அவருக்கு வழங்கப்பட்ட சலுகையை ஏற்றுக்கொள்வதற்கும், என்எஸ்இ பங்குதாரர்களின் ஒப்புதல் உள்ளிட்ட விதிமுறைகள் மற்றும் நிபந்தனைகளை நிறைவேற்றுவதற்கும் உட்பட்டது என்று என்எஸ்இ ஒரு அறிக்கையில் தெரிவித்துள்ளது.

சித்ரா ராமகிருஷ்ணா கைது
என்எஸ்இ தற்போது ஒரு மோசமான காலநிலையில் உள்ளதால் ஆஷிஷ் சௌஹான் இதனை சரியாக வழிநடத்தி ஒரு மேல்நோக்கிய பணியை மேற்கொள்வார் என எதிர்பார்க்கப்படுகிறது. சமீபத்தில் மோசடி விசாரணையில் சிக்கியுள்ள என்எஸ்இ முன்னாள் எம்டி மற்றும் சி.இ.ஓ சித்ரா ராமகிருஷ்ணா மற்றும் குழுமத்தின் தலைமை இயக்க அதிகாரி ஆனந்த் சுப்ரமணியன் ஆகியோர் என்எஸ்இயில் இருந்து வெளியேற்றப்பட்டு கைது செய்யப்பட்ட நிலையில் ஆஷ்ஷ் செளஹான் நியமனம் முக்கியத்துவமாக பார்க்கப்படுகிறது.

நோட்டீஸ்
என்எஸ்இ தற்போதைய எம்டி மற்றும் சி.இ.ஓ விக்ரம் லிமாயே, பரிமாற்றத்தில் பல்வேறு நிலைகளில் ஏற்பட்ட குறைபாடுகளுக்காக செபி அவருக்கு நோட்டீஸ் அனுப்பியுள்ளதாக கூறப்படுகிறது.

சர்ச்சைகள்
டெரிவேடிவ் வர்த்தகத்தின் அதிக பங்கின் காரணமாக என்எஸ்இ லாபம் சீராக உயர்ந்தது என்றும், ஆனால் பரிமாற்றம் மற்றும் தொழில்நுட்ப உள்கட்டமைப்பு காரணமாக சர்ச்சைகளில் சிக்கியது என்றும் இதுதான் பிரச்சனைகளுக்கு ழிவகுத்தது என்றும், ஆனால் புதிய எம்டி மற்றும் சி.இ.ஓ நியமனம் இந்த பிரச்சனைகளை தீர்க்க வழிவகுக்கும் என்றும் கூறப்படுகிறது.

சிக்கல்
2021 பிப்ரவரி 24 அன்று என்.எஸ்.இ நான்கு மணி நேர வர்த்தக இடையூறுகளை சந்தித்தது, ஏனெனில் அதன் முக்கியமான வர்த்தக உள்கட்டமைப்பு தவறான வடிவமைப்பு மற்றும் பெரும் சுமையை கையாள தேவையான திறன் குறைந்ததால் பெரும் சிக்கலை சந்தித்தது. இனிமேல் இதுபோன்ற சிக்கல் ஏற்படாது என்று எதிர்பார்க்கப்படுகிறது.

சிறப்பான பணி
1992ஆம் ஆண்டு என்எஸ்இ நிறுவனக் குழு உறுப்பினர்களில் ஒருவராக முக்கிய பங்காற்றிய சௌஹான் இப்போது என்எஸ்இ எம்டி மற்றும் சி.இ.ஓ பொறுப்பேற்பதால் அவரின் பணி சிறப்புடையதாக இருக்கும் என்றே பங்குவர்த்தக நிபுணர்கள் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
Ashish Chauhan to take charge as the new NSE head says SEBI
SEBI: Ashish Chauhan to take charge as the new NSE head | என்எஸ்இ புதிய சி.இ.ஓவாக பொறுப்பேற்கும் ஆஷிஷ் சௌஹான்.. யார் இவர்?