நீட் தேர்வு: "என் மகளின் உள்ளாடைகளை அகற்றச் சொன்னார்கள்!"- மாணவியின் தந்தை போலீசில் புகார்

ஜூலை 17ம் தேதி (ஞாயிற்றுக்கிழமை), இந்தியா முழுவதும் மருத்துவப் படிப்பிற்கான நீட் நுழைவுத் தேர்வு பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நடைபெற்றது. இந்நிலையில் கேரளா மாநிலம் கொல்லம் மாவட்டத்திலுள்ள ஆயூரைச் சேர்ந்த ‘Marthoma Institute of Information and Technology’ கல்லூரியின் நீட் தேர்வு மையத்தில் மாணவிகளின் உள்ளாடைகளை அகற்ற வற்புறுத்தியதாகவும், உள்ளாடைகளில் உலோக ஹூக் இருப்பதால் அனுமதி மறுக்கப்பட்டதாகவும் பாதிக்கப்பட்ட மாணவியின் தந்தை போலீசில் புகார் அளித்துள்ளார். இந்தக் கடுமையான நடவடிக்கைகளின் காரணமாக மன உளைச்சலுக்கு ஆளான தன் மகளால் சரியாகத் தேர்வு எழுத முடியவில்லை என்று குற்றம் சாட்டியுள்ளார்.

புகார் கடிதம்

இது பற்றி விரிவாக அவரது போலீஸ் புகாரில், “17.7.2022 அன்று கேரளா மாநிலம் ஆயூரைச் சேர்ந்த ‘Marthoma Institute of Information and Technology’ கல்லூரி நீட் தேர்வு மையத்தில் எனது மகள் நீட் தேர்வு எழுதச் சென்றார். அப்போது தேர்வு அதிகாரிகள் என் மகளின் உள்ளாடைகளை அகற்ற வேண்டும் என்று கூறியுள்ளனர். ஆனால் NTA-வின் நெறிமுறைகளில் ‘Dress Code’ பற்றிக் குறிப்பிட்டிருந்தாலும், இது பற்றிய விவரங்கள் அதில் குறிப்பிடவில்லை. எனவே என் மகள் முடியாது என்று மறுத்துள்ளார். இல்லையென்றால் தேர்வு எழுத அனுமதிக்க முடியாது என்று தேர்வு அதிகாரிகள் கூறியுள்ளனர்.

இந்தப் பிரச்னை என் மகளுக்கு மட்டும் நடக்கவில்லை. அங்குத் தேர்வு எழுதிய நிறைய மாணவிகள் இந்த நெருக்கடிகளைச் சந்தித்தனர். இதனால் பலர் இதை எண்ணிக் கண்ணீர்விட்டு அழுதனர். பின்னர்தான் தெரிய வந்தது மாணவிகளின் உடையிலிருந்த உலோக ஹூக்தான் இதற்குக் காரணம் என்று. அதன்பின் மாணவிகள் தேர்வெழுத அனுமதிக்கப்பட்டார்கள். ஆனால், தேர்வு அதிகாரிகளின் கடுமையான நடவடிக்கைகள் மாணவிகளுக்கு பெரும் மன உளைச்சலைத் தந்தது. இதனால் மாணவிகளால் சரியாகத் தேர்வு எழுதமுடியில்லை” என்று குற்றம் சாட்டியிருக்கிறார்.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.