தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பியுள்ளார்.
தமிழகத்தில் கடந்த சில நாட்களாக கொரோனா பரவல் அதிகாரித்து வருகிறது. குறிப்பாக, சென்னை, செங்கல்பட்டு, காஞ்சிபுரம், திருவள்ளூர், கோவை உள்ளிட்ட பல மாவட்டங்களில் கொரோனா பாதிப்பு நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது.
இதனையடுத்து சென்னையில் பொது இடங்களில் மக்கள் முகக்கவசம் அணிவது கட்டாயம் எனவும், கொரோனாவில் இருந்து பாதுகாத்துக்கொள்ள கட்டாய முகக்கவசம் அணிய வேண்டும் என சென்னை பெருநகர மாநாகராட்சி அறிவித்துள்ளது.
இந்த நிலையில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலினுக்கு கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு கடந்த 14ம் தேதி சென்னை காவிரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.
கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வந்த நிலையில் மு.க.ஸ்டாலின் தற்போது வீடு திரும்புகிறார். அவரின் உடல்நிலை சீராக உள்ளதாகவும் ஒரு வார காலத்திற்கு ஓய்வில் இருக்க வேண்டும் எனவும் மருத்துவர்கள் அறிவுறுத்தியுள்ளனர்.
அதனைத்தொடர்ந்து இன்று தமிழ்நாடு நாள் விழா சென்னை கலைவாணர் அரங்கத்தில் காலை 11 மணியளவில் நடைபெற உள்ள நிலையில் , முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் நிகழ்ச்சியில் கலந்துகொள்வார் என கூறப்படுகிறது.