இந்திய பங்குச்சந்தையின் மிகப்பெரிய முதலீட்டாளர்களில் ஒருவரான ராகேஷ் ஹூன்ஹூன்வாலா அவர்களுக்கு சொந்தமன ஆகாசா ஏர் விமானம் விரைவில் தனது முதல் விமான சேவையை தொடங்கும் என்று கூறப்பட்டது.
இந்த நிலையில் தற்போது ஆகாசா ஏர் விமானத்தின் முதல் விமான சேவை தொடங்கும் தேதி குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது.
மேலும் இந்த முதல் விமான சேவைக்கான டிக்கெட்டுகளை முன்பதிவு செய்து கொள்ளலாம் என அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் ஆகாஷ் விமான சேவை இந்தியாவில் தனது விமான சேவையை தொடங்க இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது.
ஆர்பிஐ நாணய கொள்கை கூட்டம் ஒத்திவைப்பு.. என்ன காரணம்..?!

ஆகாசா விமான நிறுவனம்
ஆகாய விமான நிறுவனம் தனது முதல் சேவையாக மும்பை மற்றும் அகமதாபாத் இடையே போயிங் 737 மாக்ஸ் விமானத்தை ஆகஸ்ட் 7ஆம் தேதி இயக்க உள்ளது. இந்த விமானத்தில் பயணம் செய்ய டிக்கெட்டுகள் முன்பதிவு ஜூலை 28-ஆம் தேதி முதல் தொடங்கும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

கொச்சி – பெங்களூரு
முதல் விமானம் ஆகஸ்ட் 7ஆம் தேதி மும்பை – அகமதாபாத் இடையே தொடங்கும் நிலையில் இதனை அடுத்து வாராந்திர சேவை ஆகஸ்ட் 13-ஆம் தேதி கொச்சி – பெங்களூரு இடையே தொடங்க இருப்பதாகவும் ஆகாஷ் விமான நிறுவனத்தின் நிர்வாகிகள் அறிவித்துள்ளனர்.

கட்டணம் எவ்வளவு?
மும்பையில் இருந்து அகமதாபாத் செல்வதற்கு விமான கட்டணமாக ரூபாய் 3,948 என நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது மற்ற ஏர்லைன்ஸ் டிக்கெட் கட்டணங்களைவிட மிகவும் குறைவு என்பது குறிப்பிடத்தக்கது. மற்ற விமானங்களில் ரூபாய் 4,762 கட்டணமாக உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

கூடுதல் சேவை
முதல் கட்டமாக பெங்களூரு, கொச்சி, மும்பை, அகமதாபாத் என 4 நகரங்களை இணைக்கும் ஆகாசா விமான நிறுவனம் அடுத்தடுத்து கூடுதல் சேவைகளை இயக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இன்னொரு விமானம்
சமீபத்தில் 737 மேக்ஸ் விமானங்களை வாங்கிய ஆகாசா விமானம் இன்னொரு 737 மேக்ஸ் விமானத்தையும் வாங்க போவதாகவும் இம்மாத இறுதியில் அந்த விமானம் இந்தியாவுக்கு வரும் என்றும் ஆகாய விமானத்தின் தலைமை வர்த்தக அதிகாரி பிரவீன் ஐயர் அவர்கள் கூறியுள்ளார்.

ஒவ்வொரு மாதமும் இரண்டு விமானம்
மும்பை – அகமதாபாத் இடையே எங்களுடைய முதல் சேவை ஆகஸ்ட் 7ஆம் தேதி தொடங்குகிறது என்று எங்களின் புதிய விமானம் போயிங் 737 மூலம் மக்கள் பயணம் செய்ய தயாராகி வருகிறார்கள் என்றும் அவர் தெரிவித்துள்ளார். முதல் கட்டமாக 4 நகரங்களை இணைக்கும் ஆகாசா விமான நிறுவனம், மற்ற நகரங்களுக்கும் விரைவில் விரிவாக்கம் செய்யப்படும் என்றும் ஒவ்வொரு மாதமும் இரண்டு புதிய விமானங்கள் வாங்க திட்டமிடப்பட்டுள்ளது என்றும் அதன் அடிப்படையில் படிப்படியாக விமான சேவை விரிவடையும் என்றும் பிரவீன் ஐயர் மேலும் கூறியுள்ளார்.

6வது விமான நிறுவனம்
ஏற்கனவே இந்தியாவில் இன்டிகோ, ஸ்பைஸ்ஜெட், கோபர்ஸ்ட், ஏர்ஏசியாஇ்ந்தியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் ஆகிய ஐந்து விமான நிறுவங்கள் சேவையில் ஈடுபட்டு வரும் நிலையில் தற்போது ஆகாசா விமான நிறுவனம் 6வது நிறுவனமாக களத்தில் குதித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

72 போயிங் 737 மேக்ஸ் போயிங் விமானங்கள்
ஆகாசா விமான நிறுவனம் வாங்கியுள்ள 72 போயிங் 737 மேக்ஸ் போயிங் விமானங்கள் எரிபொருளை மிச்சப்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட்டவை என்பதும், குறைந்த எரிபொருளில் பறக்க கூடிய விமானம் என்பதால்தான் இந்த நிறுவனத்தினால் குறைந்த கட்டணத்தில் சேவை செய்ய முடிகிறது என்றும் கூறப்படுகிறது.

5 ஆண்டுகளில் 80 விமானங்கள்
2023ஆம் ஆண்டுக்குள் 18 விமானங்கள் வாங்க ஆகாசா விமான நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அடுத்த 5 ஆண்டுகளில் 70 முதல் 80 விமானங்களை வாங்க உள்ளதாகவும் செய்திகள் வெளியாகியுள்ளன.
Akasa Air to operate its first commercial flight on Aug 7, opens ticket sales
Akasa Air to operate its first commercial flight on Aug 7, opens ticket sales | ஆகாசா ஏர்லைன்ஸ் முதல் விமானம் பறக்கும் தேதி அறிவிப்பு: முன்பதிவு எப்போது?