கனடாவின் ஒண்டாரியோ மாகாணத்தில் உள்ள மிட்டாய்கள் தயாரிப்பு நிறுவனம் ஒன்று மிட்டாய்களை சுவைத்துப்பார்த்து அதன் தரம், சுவை குறித்து தெரிவிக்கும் பணி செய்வதற்கு ஆண்டுக்கு இந்திய மதிப்பில் 62 லட்சம் ரூபாய் சம்பளம் தருவதாக அறிவித்துள்ளது.
கேண்டி ஃபன் ஹவுஸ் என்ற அந்த நிறுவனம் தலைமை மிட்டாய் தரச்சோதனை அதிகாரி பணியில் சேர மிட்டாய் சாப்பிடுவதில் ஆர்வம் இருக்க வேண்டும் என்பது மட்டுமே தகுதி என தெரிவித்துள்ளது. பற்கள் பாதுகாப்பு திட்டத்துடன் கூடிய இந்த பணியில் வேடிக்கையாக மிட்டாய் சாப்பிட வருபவர்களுக்கு இடமில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.