2022 ஓகஸ்ட் 01 ஆம் திகதி முதல் வெளிநாட்டு தபால் கட்டணங்கள் திருத்தப்படும் என்று தபால் திணைக்களக் கட்டளைச் சட்டத்தின் கீழ் விசேட வர்த்தமானி அறிவித்தல் வெளியிடப்பட்டுள்ளது.
அதன்படி, சர்வதேச விமான அஞ்சல் மற்றும் சர்வதேச கடல் அஞ்சல் கட்டணங்கள் ஆகிய இரண்டும் அதிகரிக்கப்படும்.
இதற்கு முன்னர், 2018 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 01 ஆம் திகதி வெளிநாட்டு தபால் கட்டணங்களில் திருத்தம் மேற்கொள்ளப்பட்டது.
4 வருடங்களுக்குப் பின்னரே இம்முறை இக் கட்டண திருத்தம் மேற்கொள்ளப்படுவதாக தபால் மா அதிபர் ரஞ்சித் ஆரியரத்ன சுட்டிக்காட்டியுள்ளார்.