ப்ளீஸ் பாடி ஷேமிங்க் பண்ணாதீங்க – ஹரிப்பிரியா இசை

'எதிர்நீச்சல்' தொடரில் அப்பாவி மருமகளாக நடிப்பில் கலக்கி வருகிறார் ஹரிப்ரியா இசை. டைமிங்கில் இவர் அடிக்கும் காமெடி பஞ்ச் வசனங்களும் இவரது அப்பாவித்தனமான நடிப்பும் பலரையும் கவர்ந்துள்ளது. விவாகரத்துக்கு பின் தொலைக்காட்சியில் கம்பேக் கொடுத்திருக்கும் ஹரிப்ரியா சீரியல் மட்டுமில்லாது வீஜேவாகவும் சில நிகழ்ச்சிகளை தொகுத்து வழங்கி வருகிறார். அத்துடன் இன்ஸ்டாவிலும் ஆக்டிவாக போட்டோஷூட்களை பகிர்ந்து வருகிறார்.

இந்நிலையில் அவரை பற்றி பேசும் சில நெட்டிசன்கள் ஹரிப்ரியா குண்டாக இருப்பதாகவும், ஆண்டி போல இருப்பதாகவும் கிண்டலடித்து வருகின்றனர். இதற்கு பதிலளித்துள்ள ஹரிப்ரியா, 'எனக்கு காலில் அடிப்பட்டு இருக்கு, அதனால வொர்க் அவுட் செய்ய முடியாது. ஆனா நான் குண்டா இருக்கேன் என்று பாடி ஷேமிங் செய்றாங்க. சிலர் என்னை ஆன்டி மாதிரி இருக்கேன்னு சொல்றாங்க. ஆன்டியா இருந்தா தான் என்ன?. வயசு ஆகுறது இயற்கை. வயசு ஏறிட்டு போறத எப்படி தப்பா சொல்ல முடியும். எல்லாருக்குமே வயசு ஆகத்தான் செய்யும். மத்தவங்கள பத்தி சொல்றதுக்கு முன்னாடி உங்கள பத்தி முதல்ல யோசிங்க. ப்ளீஸ் யாரையுமே பாடி ஷேமிங் பண்ணாதீங்க' என்று கூறியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.