நமக்கும் உதவும் சமந்தாவின் 5 லைஃப்ஸ்டைல் ஸ்டேட்மெண்ட்ஸ்!

தமிழ் மற்றும் தெலுங்கு திரையுலகில் பிரபலமான நடிகை சமந்தா, சமீபத்தில் 5 மொழிகளில் வெளியான ’’ஊ சொல்றியா’’ பாடல் மூலம் பாலிவுட், ஹாலிவுட் வரை பேசப்பட்டார். உடல் மற்றும் மன நலத்திற்கு முக்கியத்துவம் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தும் சமந்தா தனது உடற்கட்டமைப்பை மேம்படுத்துவதில் தனிக்கவனம் செலுத்திவருகிறார். இன்ஸ்டாகிராமில் ஆக்டிவாக இருக்கும் இவர், தனது உடற்பயிற்சி மற்றும் உணவு பழக்கவழக்கங்கள் குறித்த பதிவுகளை இட்டு ரசிகர்களை உற்சாகப்படுத்துவதை வாடிக்கையாகக் கொண்டுள்ளார்.

தினசரி வாழ்க்கையில் அவரிடமிருந்து நாம் கற்றுக்கொள்ளவேண்டிய ஆரோக்கிய வழிகள் உங்களுக்காக…

உடற்கட்டமைப்பு: தொடர் உடற்பயிற்சியில் ஈடுபடும் சமந்தா இந்த ஆண்டு மிகக் கடுமையான பயிற்சிகளை மேற்கொள்வதில் ஆர்வம் காட்டி வருகிறார். அதிகப்பளுவை அவர் தூக்கி அசத்திய வீடியோ ஒன்றை அவர் தனது இன்ஸ்டாகிராமில் பதிவிட்டுள்ளதே அதற்கு சான்று.

கயிறு பயிற்சி: போர்வீரர்களுக்கு அளிக்கப்படும் கடுமையான பயிற்சியான கயிறு பயிற்சி சமீபகாலமாக ட்ரெண்டாகி வருகிறது. பெரும்பாலான நடிகர், நடிகைகள் ஜாலியான வழியில் கலோரிகளை எரிப்பதில் ஆர்வம் காட்டுகின்றனர். கயிறு பயிற்சி மூலம் உடல் இயக்கத்தை அதிகரித்து, எனர்ஜியை கூட்டமுடியும். ஃபிட்னெஸ் ஃப்ரீக்கான சமந்தாவும் இந்த பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.

மேற்பகுதி உடல் பயிற்சிகள்: சமந்தா மேல் உடல்பகுதியை கட்டமைக்கும் பயிற்சியில் தனது பயிற்சியாளருடன் ஈடுபடுவதை மற்றொரு பதிவில் வெளியிட்டுள்ளார். இந்த பயிற்சிகள் உடலின் மேற்பகுதி மற்றும் கால்பகுதியை வலுப்படுத்தும். அதுமட்டுமல்லாது இதய ஆரோக்கியத்தையும் மேம்படுத்தும்.

சைக்கிளிங்: மற்றொரு போஸ்ட்டில் சமந்தா சைக்கிளிங் போவதை பதிவிட்டிட்டுள்ளார். கால் வலிமை, இதய ஆரோக்கியம் மற்றும் மொத்த உடல் வலிமையையும் மேம்படுத்த நினைப்போர் சைக்கிளிங் பயிற்சியில் ஈடுபடலாம்.

உணவில் கவனம்: ஆரோக்கியமான உணவுகளில் சமந்தா அதீத கவனம் செலுத்திவருகிறார். வீட்டுத்தோட்டம், பிரத்யேக உணவு போஸ்ட்டுக்கள் என சமந்தாவின் இன்ஸ்டாகிராம் பதிவுகள் பலவற்றில் நம்மால் இதைப் பார்க்கமுடிகிறது. இதுவும் அவருடைய உடல் ஆரோக்கியம் மற்றும் அழகுக்கு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதுமட்டுமல்லாமல் உடலை நீரேற்றத்துடன் வைத்திருக்க தினசரி போதுமான தண்ணீர் குடிப்பதையும் வழக்கமாக கொண்டுள்ளார் சமந்தா.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.