தூத்துக்குடி: தூத்துக்குடி மாவட்டம் கோவில்பட்டி அருகே காதல் திருமணம் செய்த தம்பதி வெட்டிக் கொலை செய்யப்பட்டுள்ளனர். எட்டயபுரம் வீரப்பட்டி கிராமத்தில் ரோஸ்மா(20), கணவர் மாணிக்கராஜ் ஆகியோர் காதல் திருமணம் செய்து கொண்டனர். காதல் திருமணம் செய்த மகளுடன், மருமகனையும் தந்தை முத்துக்குட்டி வெட்டிக் கொலை செய்துள்ளார்.
