மைசூரு ; “மூத்த தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவையே, முதல்வராக சித்தராமையா விடவில்லை. இப்படிப்பட்டவர் சிவகுமாரை முதல்வராக விடுவாரா,” என ம.ஜ.த., முன்னாள் முதல்வர் குமாரசாமி கூறினார்.மைசூரில் நேற்று அவர் கூறியதாவது: காங்கிரசில் அடுத்த முதல்வர் பதவிக்கு, முட்டி மோதுவோர் பட்டியல் நீள்கிறது. புதுப்புது பெயர்கள் பட்டியலில் சேர்கிறது.நாங்களும் சட்டசபை தேர்தலுக்கு தயாராகிறோம். ‘பஞ்ச ரத்னா’ திட்டத்துக்கு தயாராகிறோம்.
இந்த திட்டமே எங்களின் உயிர்நாடி. இம்முறை பெரும்பான்மையுடன், ம.ஜ.த., ஆட்சிக்கு வர வாய்ப்பளிக்கும்படி, மக்களிடம் வேண்டுகோள் விடுத்து வீடு, வீடாக செல்வோம்.ஒக்கலிகர் மாநாட்டில், சிவகுமார் பேசியதை கவனித்தேன். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்த வேண்டும் என கூறியுள்ளார். அவர் என்ன அர்த்தத்தில் கூறினார் என்பதே முக்கியம். அடுத்த தேர்தலில் ம.ஜ.த.,வுக்கு அதிக வாய்ப்பு உள்ளது. தங்கள் கட்சியை ஆதரிக்கும்படி சிவகுமார் கேட்டிருக்கலாம்.ஒருவேளை காங்கிரசுக்கு, பெரும்பான்மை கிடைத்தால் என்ன ஆகும் என்பது தெரியவில்லை. ஆனால் முதல்வராக வேண்டும் என, முன்னணியில் உள்ள தலைவர் ஒருவர் – சித்தராமையா, உற்சவம் கொண்டாடுகிறார்.
இவர் அவ்வளவு எளிதில், முதல்வர் பதவியை விட்டுக் கொடுப்பாரா.கடந்த 2013 சட்டசபை தேர்தலில், மல்லிகார்ஜுன கார்கே போன்ற தலைவர், தன் வாழ்க்கையை காங்கிரசுக்காக அர்ப்பணித்தவர். அவரையே ஒதுக்கி தள்ளி, முதல்வராக விடாமல் தடுத்த சித்தராமையா, சிவகுமாரை விட்டு விடுவாரா?வைர விழா உற்சவம் நடத்திக் கொள்பவர், இதற்கு முன் ஜனதா பரிவாரில் இருந்தவர். எங்களுடன் இருந்த போது, அவரது நடவடிக்கை என்ன என்பதை, நான் கவனித்துள்ளேன். இவர் சிவகுமாரை பின்னுக்கு தள்ளி, ஒரு அடி முன்னே சென்றுவிட்டார். சிவகுமார் முதல்வராவது அவ்வளவு எளிதல்ல.இவ்வாறு அவர் கூறினார்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement