நாட்டின் மிகப்பெரிய இன்சூரன்ஸ் நிறுவனமன எல்ஐசி, மிகப்பெரிய நிறுவன முதலீட்டாளாரும் கூட. இது பத்திர சந்தை, பங்கு சந்தைகளில் தொடர்ந்து பெரியளவில் முதலீடு செய்து வருகின்றது.
அப்படி எல்ஐசி பங்கு சந்தையில் செய்த முதலீடுகள், எந்தெந்த பங்குகளில் செய்யப்பட்டுள்ளது. மற்ற முக்கிய விஷயங்கள் என்ன? வாருங்கள் பார்க்கலாம்.
குறிப்பாக சென்செக்ஸ் 9% மேலாக சரிவினைக் கண்டு காணப்படுகிறது. இது தொடர்ந்து சர்வதேச அளவில் இருந்து வரும் பணவீக்கம், முதலீடு காராணமாக தொடர்ந்து சந்தையானது சரிவினைக் கண்டு வருகின்றது.
வேலையை காட்ட துவங்கியது சீனா-வின் Sinopec..? அதிர்ச்சியில் விளாடிமீர் புதின்..!

எத்தனை பங்குகள் வைத்துள்ளது?
பி எஸ் இ 500 குறியீட்டில் குறைந்தபட்சம் 78 நிறுவனங்களில் தனது முதலீட்டினை இன்சூரன்ஸ் நிறுவனம் உயர்த்தியுள்ளது. ஜூன் 30, 2022 நிலவரப்படி எல்ஐசி 215க்கும் மேற்பட்ட பங்குகளை வைத்துள்ளது. குறிப்பாக பல்வேறு துறை சார்ந்த பங்குகளில் முதலீடுகளை உயர்த்தியுள்ளது.

வோல்டாஸ்
எல் ஐ சி நிறுவனம் வோல்டாஸ் நிறுவனத்தில் மார்ச் 31 காலாண்டில் 4.71% ஆக இருந்த பங்கு, 6.57% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. இது தவிர உள்நாட்டு முதலீட்டாளர்களும் தங்களது முதலீடுகளை அதிகரித்துள்ளனர்.
கெமிக்கல் பங்கான ஆர்த்தி இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தில் பங்கானது 4.84%ள் இருந்து 6.61% ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. ஜூன் காலாண்டில் உள்ள பங்கினில் 20% சரிவினைக் கண்டுள்ளது.

சிமெண்ட் பங்கில் முதலீடு அதிகரிப்பு
ராம்கோ சிமெண்ட் நிறுவனத்தில் 6.84%ல் இருந்து, 8.29% ஆகவும், ஸ்ரீ சிமெண்ட் நிறுவனத்தில் 2.39%ல் இருந்து, 3.01% ஆகவும், அல்ட்ராடெக் சிமெண்ட் நிறுவனத்தில் 4.42%ல் இருந்து, 4.65% ஆகவும், அம்புஜா சிமெண்ட் நிறுவனத்திலும் 6.30%ல் இருந்து, 6.33% ஆகவும் பங்கினை அதிகரித்துள்ளது.

வங்கி பங்குகள்
இதே யூனியன் பேங்க் ஆப் இந்தியா, ஐசிஐசிஐ வங்கி, கோடக் மகேந்திரா வங்கி, ஸ்டேட் பாங்க் ஆப் இந்தியா உள்ளிட்ட வங்கி பங்குகளிலும் முதலீடுகள் அதிகரிக்கப்பட்டுள்ளது.

ஐடி பங்குகளும் அடங்கும்
மைண்ட் ட்ரீ, டிக்ஸான் டெக்னாலஜிஸ், ஹெச் டி எஃப்சி ஏஎம்சி, வெல்ஸ்பன் கார்ப், தீபக் நைட்ரேட், ஆதித்யா பிர்லா சன் லைஃப் ஏ எம் சி, கேப்ரி குளோபல், இஃபோ எட்ஜ், டாக்டர் ரெட்டீஸ் லேபாரட்டீஸ், ஐஜிஎல், கோல்கேட், ஜே எஸ் டபள்யூ ஸ்டீல், கேம்ஸ், டாடா கன்சியூமர் புராடக்ஸ், ஏசிசி, டிவிஸ்ப்ரோ, ஹெச் டி எஃப் சி, டிவிஎஸ் மோட்டார்ஸ், இன்ஃபோசிஸ், எல் & டி, ஃபைசர், ஆஸ்ட்ரல், கோத்ரேஜ் அக்ரோவெட், ஹெச் சி எல் டெக்னாலஜிஸ், டிசிஎஸ், ஹீரோ மோட்டோகார்ப், சிஇஎஸ்சி, அதானி எஸ்டர்பிரைசஸ், பார்தி ஏர்டெல், ஜைடஸ் லைஃப்சயின்ஸ், உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகளை அதிகரித்துள்ளது.
LIC increased stake in these many companies in June quarter: should you buy?
LIC increased stake in these many companies in June quarter: should you buy?/எல்ஐசி வாங்கி வைத்த பங்குகள் என்னென்ன தெரியுமா.. இதோ லிஸ்ட்!