கடைக்கு சென்ற சிறுமியை கடத்தி 3 மாதங்களாக வல்லுறவு.. குற்றவாளிகள் சிக்கியது எப்படி?

மூன்று மாதங்களாக 9ம் வகுப்பு படிக்கும் சிறுமியை அறையில் அடைத்து வைத்து பாலியல் ரீதியில் வன்கொடுமை செய்துள்ள பயங்கர சம்பவம் ஜார்க்கண்ட் மாநிலத்தில் அரங்கேறியிருக்கிறது.
கடந்த ஏப்ரல் 20ம் தேதியன்று பொகரோ பகுதியைச் சேர்ந்த பதின்ம வயது சிறுமி ஒருவர் சந்தைக்கு சென்றுவிட்டு தனது வீட்டு திரும்பிக் கொண்டிருந்தார். அப்போது ஆட்டோவில் வந்த மந்தோஷ் குமார் என்ற நபர் ஒருவர் மனோஜ் குமார், விஷ்னு குமார் ஆகியோரது உதவியுடன் அந்த சிறுமியை கடத்தியிருக்கிறார்கள்.
அதன் பிறகு சிறுமியை தனிமையான இடத்தில் அடைத்து வைத்து தொடர்ந்து பாலியல் வன்கொடுமை செய்து வந்திருக்கிறார்கள். அச்சிறுமி அவர்களிடமிருந்து தன்னை விடுவித்துக்கொள்ள போராடிய போதெல்லாம் காட்டுமிராண்டித்தனமாக தாக்கவும் செய்திருக்கிறார்கள். இப்படியாக மூன்று மாதங்கள் கடந்திருக்கிறது.
ALSO READ:
விருத்தாசலம்: பள்ளி மாணவி எடுத்த விபரீத முடிவு.. தற்கொலை கடிதத்தில் உருக்கமான காரணம்!
இதனிடையே சிறுமியின் பெற்றோரும் தனது மகளை காணவில்லை என போலீசில் புகாரும் அளித்திருக்கிறார்கள். இப்படி இருக்கையில் அந்த கயவர்கள் இல்லாத நேரம் பார்த்து அவர்கள் அடைத்து வைத்திருந்த இடத்திலிருந்து கடந்த ஜூலை 19ம் தேதி அச்சிறுமி தப்பித்திருக்கிறார்.
சிறுமியை தப்பிக்க வைக்க அவ்வழியே சென்ற பெண் ஒருவர் உதவியிருக்கிறார். கயவர்களின் பிடியிலிருந்து தப்பித்தவர் தனது பெற்றோரிடம் சென்று சேர்ந்ததும் நடந்தவற்றை கூறியிருக்கிறார்.
இதனையடுத்து போலீசிடமும் சிறுமி வாக்குமூலம் அளிக்க போக்சோ சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்திருக்கிறார்கள். பின்னர் மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் மேற்குறிப்பிட்ட அந்த மூன்று குமார்களையும் போலீசார் கைது செய்திருக்கிறார்கள்.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.