பைக்கில் சென்றுகொண்டிருந்த இளைஞர் படுகொலை – அச்சத்தில் பொதுமக்கள்

பூந்தமல்லி அருகே வாலிபர் சரமாரியாக வெட்டி படுகொலை செய்யப்பட்டார். பட்டப்பகலில் நடந்த படுகொலையால் பொதுமக்கள் அச்சத்தில் உள்ளனர். 
பூந்தமல்லி அடுத்த புளியம்படு பகுதியில் மோட்டார் சைக்கிளில் கேபிள் வயரை வைத்துக்கொண்டு ஒருவர் சென்று கொண்டிருந்தார். அப்போது அவரை வழிமறித்த ஆறு பேர் கொண்ட மர்ம கும்பல் மறைத்து வைத்திருந்த அரிவாளால் சரமாரியாக வெட்ட தொடங்கினார்கள். இதையடுத்து அவர்களிடம் இருந்து தப்பியோட முயற்சி செய்த நபரை விரட்டிச் சென்று சரமாரியாக வெட்டி படுகொலை செய்தனர். இதில் அந்த நபர் தலை சிதைந்து சம்பவ இடத்திலேயே துடிதுடித்து உயிரிழந்தார். அவருடன் வந்த நபருக்கும் காயம் ஏற்பட்டுள்ளது. அவரை சிகிச்சைக்காக மருத்துவமனைக்கு அழைத்து சென்றுள்ளனர்.
image
இந்த சம்பவம் குறித்து தகவலறிந்த பூந்தமல்லி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து கொலை செய்யப்பட்ட நபரின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். மேலும் கொலை செய்யப்பட்ட நபர் யார்? கொலைக்கான காரணம் என்ன? என்பது குறித்து பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். தலை மற்றும் கைகளில் கொலையாளிகள் வெட்டியதால் அந்த நபரின் முகம் முழுவதும் சிதைந்து முகமே தெரியாத அளவிற்கு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
image
மேலும் கொலைக்கு காரணம் தொழில் போட்டியா? அல்லது முன் விரோதம் காரணமா? என்ற கோணத்திலும் பூந்தமல்லி போலீசார் விசாரித்து வருகின்றனர். பட்டப்பகலில் நடந்த கொலை சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.Source : WWW.PUTHIYATHALAIMURAI.COM

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.