பெங்களூரு ; உயர் படிப்புகளுக்கான சி.இ.டி., பொது நுழைவு தேர்வு முடிவுகள் வரும் 30ம் தேதி வெளியிடப்படுகிறது.கர்நாடகாவில் பொறியியல், பி.எஸ்.டி., விவசாயம், பி.பார்ம் உட்பட பல்வேறு உயர் படிப்புகளுக்கு, பி.யு.சி.,க்கு பின், சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு நடத்தப்படுகிறது.இந்தாண்டிற்கான சி.இ.டி., தேர்வு ஜூன் 16, 17, 18 ஆகிய நாட்களில், 486 மையங்களில் நடந்தது.
இம்முறை, இரண்டு லட்சத்து, 16 ஆயிரத்து, 525 மாணவ – மாணவியர் சி.இ.டி., தேர்வை எழுதினர்.கர்நாடக பி.யு., தேர்வு, சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., 12ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியான நிலையில் சி.இ.டி., தேர்வு முடிவுகள் எப்போது வெளியாகும் என்று மாணவர்கள் எதிர்பார்த்து காத்திருந்தனர்.இது குறித்து, உயர்கல்வி துறை அமைச்சர் அஸ்வத் நாராயணா, பெங்களூரில் நேற்று கூறியதாவது:சி.இ.டி., எனும் பொது நுழைவு தேர்வு முடிவுகள் வரும் 30ம் தேதி வெளியிடப்படும். முறைகேடுகளை தடுக்கும் வகையில் பலத்த முன்னெச்சரிக்கையுடன் தேர்வு நடத்தப்பட்டது.சி.பி.எஸ்.இ., – ஐ.சி.எஸ்.இ., 12ம் வகுப்பு மாணவர்கள், தங்கள் மதிப்பெண்களை, கர்நாடக தேர்வு ஆணையத்தின் இணையதளத்தில் இன்று மாலைக்குள் பதிவேற்றம் செய்ய வேண்டும்.இவ்வாறு அவர் கூறினார்.முடிவுகள் வெளியாவதால், பொறியியல் மாணவர்கள் கல்லுாரிகளில் சேர்வதற்கு ஆர்வமாக உள்ளனர்.
புதிய செய்திகளுக்கு தினமலர் சேனலை Subscribe செய்யுங்கள்
Advertisement