திருப்பதி: ஆடி மாதம் பாத பூஜை, பக்தர்களுக்குக் கிடைக்காத பூ பிரசாதம் – பலரும் அறியாத ஆச்சர்யங்கள்

திருப்பதி என்றாலே அற்புதம்தான். தரிசனம், நியதிகள், வழிபாடு கள், பிரசாதங்கள், விழாக்கள் என ஒவ்வொன்றுக்கும் இங்கே தனிச் சிறப்பு உண்டு. திருப்பதி கோயிலில் பெருமாளின் பிரசாதப் பூக்கள் பக்தர்களுக்குக் கிடையாது. உக்ர ஶ்ரீநிவாஸர் என்ற உற்சவர் பெருமாள் வருடத்துக்கு ஒருமுறை, அதுவும் இரவில் மட் டுமே வெளி வருவாராம்! இப்படி, நம்மை வியக்கவும் சிலிர்க்கவும் வைக்கும் திருப்பதியின் சில ஆச்சர்ய தகவல்கள் உங்களுக்காக!

ஆதி யுகத்தில் திருப்பதிக்கு என்ன பெயர்? திருப்பதி மகிமைமை களை விரிவாக எடுத்துச் சொன்னது யார்?

தற்போது இந்தக் கலியுகத்தில் வேங்கடாசலம் என்று போற்றப்படுகிறது திருப்பதி திருமலை. அதாவது `பாவங்களை அழிக்கும் மலை’ என்று பொருள். துவாபர யுகத்தில் இதன் பெயர் ‘சேஷ ஸைலம்’. திரேதா யுகத்தில்… அதாவது ராமாயணக் காலத்தில் இதன் பெயர் அஞ்சனாத்ரி. ஆதியுகமாம் கிருத யுகத்தில் இந்த மலை வ்ருஷாத்ரி என்ற பெயருடன் திகழ்ந்ததாம். இந்தத் தலத்தின் மகிமை குறித்து ஜனக மகாராஜருக்கு, அவருடைய குருவான ஸதாநந்தர் விளக்கியதாக பவிஷ்யோத்ர புராணம் விவரிக்கிறது.

திருமலை திருப்பதி

திருப்பதி முடிக்காணிக்கை தாத்பரியம் – புராணங்கள் சொல்லும் காரணம் என்ன தெரியுமா?

அகங்காரத்தைக் களைந்து ஆண்டவன் பாதங்களில் சரணடை யும் தத்துவத்தையே திருமலையில் மொட்டை அடித்து முடி காணிக்கை செலுத்தும் பிரார்த்தனை உணர்த்துகிறது. ஆன்மிகப் பெரியவர்கள் சிலர் புராணக் கதை ஒன்றின் மூலம் விசேஷ விளக்கத்தைத் தருகிறார்கள். `வ்ருஷபன் என்ற ராட்சஸன், திருமலையில் தும்புரு தீர்த்தக் கரையில் அருளும் நரசிம்மரைப் பூஜித்து வந்தான். அதுவும் எப்படி? பூஜையின் முடிவில் தமது தலையையே பூவாகக் கிள்ளி எடுத்து எம்பெருமான் திருவடிகளில் அர்ப்பணம் செய்வானாம். மறுகணம் அவனது தலை மீண்டும் முளைத்துவிடுமாம்! இங்ஙனம் நம்மால் தலையை அறுத்து அர்ப்பணிக்க முடியாது என்பதால், தலைமுடியை மட்டும் காணிக்கையாகச் செலுத்தும் வழக்கம் பிற்காலத்தில் தோன்றியிருக்கலாம்’ என்பார்கள் ஆன்மி கப் பெரியோர்கள். வேறொரு விளக்கமும் சொல்லப்படுவதுண்டு. ஸோம யாகம் செய்யும் கர்த்தா மொட்டையடித்துக்கொண்டு அந்த யாகத்தைச் செய்ய வேண்டும் என்பது சாஸ்திர நியதி. திருமலை எம்பெருமானை சேவிப்பதும் ஒரு வகையில் ஸோம யாகம் செய்வதற்குச் சமானமானது. ஆகையால் மொட்டை அடித்துக்கொள்ளும் வழக்கம் வந்திருக்கலாம் என்றும் கூறுவர்.

திருப்பதியில் பெருமாளுக்குச் சமர்ப்பிக்கப்பட்ட பூக்களைப் பிரசாதமாகத் தருவதில்லை ஏன் தெரியுமா?

திருமலை திருப்பதி கோயிலில் வேங்கடாசலபதி மட்டுமே பிரதானம்.மற்ற தெய்வங்களுக்கு உரித்தான புஷ்பங்கள் அனைத்தும் அவர்களுக்குச் சாத்தப்படும் பாவனையுடன் வேங்கடாசலபதியின் பாதக் கமலங்களிலேயே சமர்ப்பிக்கப்படுகின்றன. இங்ஙனம் மற்ற தெய்வங்களுக்கும் சேர்த்துச் சமர்ப்பிக்கப்பட்ட புஷ்பங்களைத் தனது பிரசாதமாக வேங்கடாசலபதி வழங்குவது முறையல்ல என்பதால், அவர் சந்நிதியில் இருக்கும் புஷ்பங்களைப் பக்தர்களுக்கு வழங்குவதில்லை. மாறாக, அவையனைத்தும் கோயிலை ஒட்டி யிருக்கும் பூக்கிணற்றில் சேர்க்கப்படுகின்றன. இந்த நியதியை ஏற்படுத்தியவர் ஶ்ரீராமாநுஜர்

திருமலை திருப்பதி

வருடத்துக்கு ஒருமுறை இரவில் மட்டுமே வெளியே வரும் உற்சவர் பெருமாள்!

திருப்பதியில் போக ஶ்ரீநிவாஸர், கொலு ஶ்ரீநிவாஸர், உக்ர ஶ்ரீநிவாஸர், உத்ஸவ ஶ்ரீநிவாஸர் ஆகிய மூர்த்திகள் ஓவ்வொருவ ருக்கும் தனிச் சிறப்பு உண்டு. இந்த மூர்த்திகளில் உக்ர ஸ்ரீநிவாஸர் `ஸ்நபன பேரம்’ என்றும் அழைக்கப்படுகிறார். நம்மாழ்வார் பாசுரமிட்டு பாடிய வேங்கடத் துறைவார் இவரே. சூரியக் கிரணங் கள் இவர் மேல் பட்டால், உக்ரத்வம் ஏற்படுமாம். வெகு காலத்துக்கு முன்பு திருமலையில் மூலவருக்கு உத்ஸவ மூர்த்தியாக எழுந்தருளியிருந்தவர் இவரே! ஏதோ ஒரு முறை, பிரம்மோத்ஸவத்தின்போது இவரை எழுந்தருளச் செய்தபோது, திருமலையில் பயங்கரமான சூழல் ஏற்பட்டு உத்ஸவம் நின்று விட்டதாம். ஆக, தற்போது வருடத்தில் ஒரு நாள் மட்டும் அதாவது கார்த்திகை மாதம் சுக்லபட்ச துவாதசி (கைஸிக துவாதசி) அன்று இரவு 2.30 மணிக்குக் கோயிலைவிட்டு வெளியே கிளம்பி, 3.30 மணிக்குள் கோயிலுக்குள் எழுந்தருளப்பண்ணி விடுகிறார்கள். பிரம்மோத்ஸவம் முடிந்து துவாதஸாராதனம் நடக்கும்போதும், மஹா சம்ப்ரோக்ஷணம் நடக்கும்போதும் இவருக்கு ஆலயத்தில் திருமஞ்சனம் ஆராதநம் நடக்கும்.

திருவேங்கடவன் திருமலையில் பாதம் பதித்த இடம்!

நாராயணகிரி பாதாலு பெருமாள் சந்நிதிக்குச் சுமார் 2 கி.மீ. தூரத்தில் நாராயணகிரி சிகரத்தின் மேல் பெருமாள் பாதங்கள் உள்ள சிலை ப்ரதிஷ்டை செய்யப்பட்டுள்ளது. வைகுண்டத்தி லிருந்து நேராக பூலோகத்தில் கீழே இறங்கிய பகவான், இங்கு பாதத்தை வைத்து இறங்கினாராம். வருடம்தோறும் ஆடி மாதம் சுக்ல துவாதசி அன்று இங்குள்ள மண்டபத்தில் உள்ள தூண்களுக்கு 2 குடைகளைக் கட்டிப் பெருமாள் பாதங்களுக்குப் பூஜை நடக்கிறது.

Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.