ரெசிஷன் அச்சம்.. மக்களிடம் முக்கிய மாற்றம்.. பொருளாதார வல்லுனர்கள் சொல்வது என்ன..?

உலகளவில் மக்களின் செயல்பாடுகள் பொருளாதார வல்லுனர்களுக்குப் பல கேள்விகளை ஏழுப்பவது மட்டும் அல்லாமல், ரெசிஷன் அச்சத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உணவு பொருட்கள், மருந்து பொருட்கள், உற்பத்தி பொருட்கள் என அனைத்தும் விலை உயர்ந்துள்ளதால் நுகர்வோர் சந்தையில் பெரும் மாற்றம் ஏற்பட்டு உள்ளது.

இதை உறுதி செய்யும் வகையில் செவ்வாய்க்கிழமை உலகின் மிகப்பெரிய ரீடைல் நிறுவனமான வால்மார்ட் EPS அளவீட்டை 13 சதவீதம் குறைத்தது. இதன் மூலம் வால்மார்ட் நிறுவனத்தை நிர்வாகம் செய்தும் வால்டன் குடும்பத்தின் சொத்து மதிப்பு 11.4 பில்லியன் டாலர் சரிந்துள்ளது.

இதில் இருந்து பொருளாதார வல்லுனர்கள் அச்சம் அடையவும், அதிர்ச்சி அடையவும் என்ன இருக்கு..?

ராம்நாத் கோவிந்த்-க்கு வழங்கப்பட்ட ஓய்வூதிய சலுகைகள் என்னென்ன தெரியுமா?

நுகர்வோர் சந்தை

நுகர்வோர் சந்தை

உலகம் முழுவதிலும் பணவீக்கம் பெரும் பிரச்சனையாக இருக்கும் நிலையில் மக்கள் அடிப்படை உணவுகள், குறைந்த அளவிலான உணவுப் பொருட்களை மட்டுமே வாங்கி வருகின்றனர். இதேபோல் ஆடம்பர பொருட்கள், தேவையில்லாத பொருட்கள் வாங்குவதைத் தவிர்த்து வருகின்றனர். மேலும் ஹோட்டலுக்குச் சென்றால் கூட விலை குறைவான உணவுகளை வாங்கி வருகின்றனர்.

நடுத்தர மக்கள்

நடுத்தர மக்கள்

மேலே கூறப்பட்ட அனைத்தும் பொருளாதார அடிப்படையில் நடுத்தர மற்றும் கீழ் தட்டில் இருக்கும் மக்கள் மத்தியில் ஏற்பட்டு உள்ள மாற்றம். இதேவேளையில் பணக்காரர்கள் 3000 டாலர் மதிப்பிலான லூயிஸ் உய்ட்டன் ஹேண்டபேகுகளை அசால்ட்டாக வாங்கி வருகின்றனர், இன்னும் சிலர் வெளிநாட்டு நாடுகளுக்குச் சுற்றுலா சென்று வருகின்றனர்.

கொரோனா தொற்றுக் காலம்
 

கொரோனா தொற்றுக் காலம்

இதேபோன்ற சூழ்நிலை கொரோனா தொற்று உச்சம் பெற்று முதல் அலை முடிந்த பின்பு நடந்தது. ஏழை மற்றும் நடுத்தர மக்கள் வருமானத்திற்காகப் போராடி வந்த நிலையில் பெரும் பணக்காரர்கள் அதிகளவில் செலவு செய்தும், முதலீடு செய்தும் வந்தனர். இதே காரணமாகவே அப்போதைய காலகட்டத்தில் ஆடம்பர பொருட்களின் விற்பனை சந்தை மாபெரும் வளர்ச்சியைப் பதிவு செய்தது.

முக்கியமான மாற்றம்

முக்கியமான மாற்றம்

தற்போது மக்கள் மத்தியில் நடந்திருக்கும் இந்த மாற்றம் அனைத்தும் பொருளாதாரம் ரெசிஷனுக்குச் செல்லும் பாதை என வல்லுனர்கள் கூறுகின்றனர். இது மட்டும் அல்லாமல் சந்தை வல்லுனர்கள் பொருளாதார வீழ்ச்சியின் வேகத்தைக் கணிக்க நிறுவனங்களின் காலாண்டு முடிவுகளை உற்று நோக்கி வருகிறது. ஆனால் தற்போது வரையில் அனைத்து பிரிவிலும் கலவையான முடிவுகளும் தரவுகளும் தான் உள்ளது.

இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா,

இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா,

இதேவேளையில் இந்தியா, ஜெர்மனி, அமெரிக்கா, சீனா, பிரிட்டன் நாடுகளின் பொருளாதார வளர்ச்சி அளவுகள் நடப்பு ஆண்டுக்குக் குறைக்கப்பட்டு உள்ளது. இதனால் பொருளாதார வல்லுனர்கள் எப்போது ரெசிஷன் துவங்கும் என்பதைத் தீவிரமாக ஆலோசனை செய்து வருகிறனர்.

ஆடம்பர சந்தை

ஆடம்பர சந்தை

ஏற்கனவே கூறியது போல் ஆடம்பர சந்தையும், சுற்றுலா சந்தையும் வளர்ச்சியில் இருந்தாலும், விலை உயர்வின் காரணமாக நுகர்வோர் சந்தையில் சில பாதிப்புகள் உடன் கலவையான சூழ்நிலை தான் தற்போது நிலவுகிறது.

ரெசிஷன் அச்சம்

ரெசிஷன் அச்சம்

ஆனால் ரெசிஷன் அச்சம் பெரிய அளவில் உள்ளது, இதற்கு முக்கியமான காரணம் அமெரிக்காவின் மத்திய வங்கியான பெடரல் ரிசர்வ் அறிவிக்க இருக்கும் வட்டி விகித உயர்வு தான். இதேபோல் இந்தியாவும் தனது வட்டி விகிதத்தை உயர்த்தும் நாணய கொள்கை கூட்டத்தை ஆகஸ்ட் மாதம் நடந்த உள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

People Buy Cheap, Less amid record inflation; Is Global Economy closer to recession

People Buy Cheap, Less amid record inflation; Is Global Economy closer to recession ரெசிஷன் அச்சம்.. மக்களிடம் முக்கிய மாற்றம்.. பொருளாதார வல்லுனர்கள் சொல்வது என்ன..?ஓ

Story first published: Wednesday, July 27, 2022, 16:13 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.