இந்த பிரிவு எங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது: மனைவி ஜெலன்ஸ்கா குறித்து உக்ரைன் அதிபர் உருக்கம்!

கீவ்,

உக்ரைன் போர் தொடங்கியதில் இருந்து அதிபர் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்தினர் பிரிந்து வாழுகின்றனர். இந்த நிலையில் இந்த பிரிவு தங்களுக்குள் இருக்கும் காதலை இன்னும் அதிகப்படுத்தியுள்ளது என்று அவர்கள் தெரிவித்துள்ளனர். அதிபர் ஜெலன்ஸ்கி தனது மனைவி ஜெலன்ஸ்காவை 26 வருடங்களுக்கு முன் சந்தித்ததாக கூறினார். அவரை தன்னுடைய மிக நெருக்கமான தோழி என்றும் விவரித்தார்.

“என்னுடைய மனைவி சிறந்த தேசப்பற்றாளர் மற்றும் அவர் உக்ரைனை அளவு கடந்து நேசிக்கிறார். எனக்கு ஒரே மனைவி, ஒரே குடும்பம், ஒரே காதல், நான் மகிழ்ச்சியாக இருக்கிறேன்.இந்த போரினால் ஏற்பட்ட பிளவை நாங்கள் சமாளிக்கிறோம். இது எங்களுக்குள் இருக்கும் அன்பை இன்னும் ஆழப்படுத்தியுள்ளது. இன்னும் நாங்கள் தொடர்ந்து காதலித்துக் கொண்டிருக்கிறோம்.

நான் எண்ணி பார்த்ததை விட அவர் மிகவும் ஊக்கம் உடையவர் என்பதை இப்போது அறிந்து கொண்டேன்.ஒரு வகையில் என்னுடைய குடும்பத்தை மிகவும் இழந்து தவிக்கிறேன். அவர்களை கட்டி அணைக்க வேண்டும் என்று தோன்றுகிறது. இதற்காக அவர்களை ஆபத்தில் சிக்க வைக்க நான் விரும்பவில்லை” என்று 44 வயதான அதிபர் ஜெலன்ஸ்கி கூறினார்.

அவருடைய மனைவி ஜெலன்ஸ்கா கூறுகையில், தன்னுடைய கணவர் தன் குழந்தைகளை இரண்டு குழந்தைகளையும் பார்க்க முடியாமல் தவிப்பதாக கூறினார். 44 வயதான ஜெலன்ஸ்கா கூறுகையில், “கடந்த ஐந்து மாதங்கள் உக்ரைனில் வாழும் ஒவ்வொருவருடைய வாழ்க்கையிலும் மிக மோசமான காலம் ஆக உள்ளது, என்னையும் சேர்த்து. எங்களுடைய உணர்ச்சிகளை நாங்கள் எவ்வாறு சமாளிக்கிறோம் என்பதே தெரியவில்லை.

போர் தொடங்கியதில் இருந்து ஐந்து மாதங்கள் ஆகின்றன. பாதுகாப்பு காரணங்களுக்காக அவரால் வீட்டிற்கு வந்த குழந்தைகளை பார்க்க நேரமில்லை.இது எங்களுக்கு கடினமான நேரம்.” அவர்களுடைய மூத்த மகள் சான்றா 18 வயது மற்றும் இளைய மகன் கை ரேடியோ ஒன்பது வயது ஆகிய இருவரையும் பாதுகாப்பு காரணங்களுக்காக வெளியிடப்படாத இடத்தில் பத்திரமாக அனுப்பி வைத்துள்ளதாகவும் கூறினார்.

பல மாதங்கள் தலைமறைவாக இருந்த அவர் கடந்த சில மாதங்களாக வெளியே முகம் காட்டியுள்ளார், போரில் தீவிரமாக செயலாற்று தொடங்கியுள்ளார்.சமீபத்தில் அமெரிக்க தலைநகர் வாஷிங்டனின் அரசியல் கூட்டமைப்பில் பேசிய அவர், உக்ரைனுக்கு அமெரிக்கா ஆயுதங்கள் வழங்கி ஆதரவளிக்க வேண்டும் என்று கேட்டுக்கொண்டார். உக்ரைன் முழுமைக்கும் ஜெலன்ஸ்கி மற்றும் அவரது குடும்பத்திற்கு பரவலாக ஆதரவு உள்ளது.

மற்றொரு பேட்டியில் அதிபர் ஜெலன்ஸ்கி கூறுகையில் “எங்களுடைய நாடு முழுவதும் கொடூர சம்பவங்கள் நடந்து கொண்டிருக்கின்றன. கொரோனா எரிவாயு போன்றவை எல்லாம் ஒரு விஷயமே அல்ல, இப்போது நடந்து கொண்டிருக்கும் போருடன் ஒப்பிடுகையில் அவையெல்லாம் பெரிய விஷயங்களே அல்ல எங்களுடைய மகன் ஒரு ராணுவ வீரராக ஆக வேண்டும் என்று ஆசைப்படுகிறான். அவ்வாறு வருங்காலத்தில் நடந்தால் மிகவும் பெருமையாகஎண்ணுவேன்.

மேலும் இங்கிலாந்து பிரதமர் பதவியில் இருந்து போரிஸ் ஜான்சன் விலகினாலும் அந்நாட்டு அரசியலில் அவர் தொடர்ந்து இருப்பார்.அதன் மூலம் அவருடைய ஆதரவு உக்ரைனுக்கு எப்போதும் கிடைக்கும்” என்றும் கூறினார்


Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.