கூகுளின் பிரம்மாண்ட திட்டம்.. 3டி வியூவில் மேப்ஸ்.. இனி ரொம்ப ஈஸியா பயணம் செய்யலாம்!

கூகுள் மேப்ஸ் 3டி ஸ்ட்ரீட் வியூ என்ற அம்சத்தை கூகுள் மேப்ஸ் இந்தியாவில் அறிமுகப்படுத்தியுள்ளது.

இன்றைய காலக்கட்டத்தில் கூகுள் என்பது மக்களின் வாழ்வில் ஒரு அங்கமாகவே மாறி விட்டது எனலாம். உதாரணத்திற்கு ஒரு பொருள் வேண்டுமெனில் அது எந்த கடையில் கிடைக்கும். அது எங்கு இருக்கிறது. எவ்வளவு தூரம் செல்ல வேண்டும். எப்படி செல்ல வேண்டும் என்பது முதல் கொண்டு கூகுள் மேப் மூலமாக தெரிந்து கொள்கிறோம். அந்தளவுக்கு தொழில்நுட்பம் வளர்ந்து விட்டது.

கூகுள் நிறுவனத்தால் 39 முறை நிராகரிக்கப்பட்டவருக்கு நிகழ்ந்த அதிசயம்!

கூகுள் மேப்ஸ் 3டி ஸ்ட்ரீட் வியூ

கூகுள் மேப்ஸ் 3டி ஸ்ட்ரீட் வியூ

ஆனால் தற்போது இந்த தொழில்நுட்பமானது இன்னொரு படி மேலே வளர்ந்து விட்டது எனலாம். ஏனெனில் கூகுள் மேப்ஸ் 3டி ஸ்ட்ரீட் வியூ அறிமுகப்படுத்தியுள்ளது. இது இந்தியாவில் முதன் முதலில் 10 நகரங்களில் இந்த வசதியினை அறிமுகப்படுத்தியுள்ளது. முதல் முறையாக உள்ளூர் நிறுவனங்களிடம் தரவினை பெற்று அறிமுகப்படுத்தியுள்ளது.

எந்தெந்த நிறுவனங்கள்?

எந்தெந்த நிறுவனங்கள்?

இது டெக் மகேந்திரா மற்றும் ஜெனிசிஸ் இண்டர்நேஷனல் ஆகியவற்றிடமிருந்து தரவுகள் பெற்று அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது. இந்த ஆண்டு இறுதியில் மேற்கொண்டு பல நகரங்களுக்கு விரிவுபடுத்த கூகுள் நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

பயன் என்ன?
 

பயன் என்ன?

கூகுள் பயன்பாட்டில் பிரபலமான ஒன்றான கூகுள் மேப், ஒரு இடத்தில் இருந்து மற்றொரு இடத்திற்கு பயணிக்க ஏதுவான ஒன்றாக உள்ளது. இதே கூகுள் ஸ்ட்ரீட் வியூ துல்லியமான தகவல்களை கொடுக்கும். இதில் சாலையின் நிலையை கூட தெளிவாக அறிந்து கொள்ள முடியும் என கூறப்படுகின்றது. ஆக நீங்கள் வெளியே செல்லும்போது தரமான பயனுள்ள விஷயங்களை இதன் மூலம் அறிந்து கொள்ள முடியும்.

சேவை

சேவை

கூகுள் மேப்ஸின் சிறந்த சந்தைகளில் ஒன்று இந்தியா. கடந்த 2016ம் ஆண்டில் சில கட்டுபாடுகள் விதிக்கப்பட்ட நிலையில், தற்போது மீண்டும் அனுமதிக்கப்பட்டுள்ளது. இது முதல் கட்டமாக இந்தியாவின் 10 நகரங்களில் கிடைக்கும். இதன் மூலம் நாடு முழுவதும் 1,50,000 கிலோமீட்டர்களை உள்ளடக்கும் என்றும் கூறியுள்ளது.

பிரச்சனை என்ன?

பிரச்சனை என்ன?

எனினும் ஒருவர் ஒரு இடத்தை மற்றொருவருடன் பகிரும்போது, அந்த இடத்தை விட்டு வெளியேறினார்கள் என்பதைப் பார்ப்பதற்கான வாய்ப்பும் உண்டு. இந்த அம்சத்தில் தனியுரிமை பறிபோகும் என்ற விஷயமும் இருப்பதால், இது குறித்த விளக்கத்தையும் கூகுள் தெரிவித்துள்ளது. ஏற்கனவே ஒரு நபருடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிரத் தேர்வுசெய்த ஒருவருக்கு மட்டுமே அறிவிப்புகளை அமைக்க முடியும்.

தனியுரிமை பறிபோகலாம்

தனியுரிமை பறிபோகலாம்

பயனருடன் தங்கள் இருப்பிடத்தைப் பகிர்ந்தவர், அவர்களுக்குத் தெரியப்படுத்த பல நினைவூட்டல்களைப் பெறுவார். மேப் பயன்பாட்டில் புஷ் அறிவிப்பு மற்றும் மின்னஞ்சல், தொடர் மாதாந்திர மின்னஞ்சல்கள் உட்பட நினைவூட்டல்கள் வரும். ஆக உங்களது தனியுரிமை பறிபோகும் என்ற கவலை இருக்காது என விளக்கம் கொடுத்துள்ளது. கூகுள் மேப் போல, மேப் மை இந்தியாவும் கொடுத்துள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Google, MapMyIndia announce 3D maps for Indian major cities

Google, MapMyIndia announce 3D maps for Indian major cities/கூகுளின் பிரம்மாண்ட திட்டம்.. 3டி வியூவில் மேப்ஸ்.. இனி ரொம்ப ஈஸியா பயணம் செய்யலாம்!

Story first published: Thursday, July 28, 2022, 14:25 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.