உற்பத்தி துறையில் குவியும் அன்னிய முதலீடு.. டாப் 5 இடத்தில் தமிழ்நாடு..!

இந்திய உற்பத்தி துறை 2021-22 ஆம் ஆண்டில் மட்டும் சுமார் 21.34 பில்லியன் டாலர் மதிப்பிலான அன்னிய நேரடி முதலீடுகளை ஈர்த்துள்ளது.

இது முந்தைய ஆண்டுடன் ஒப்பிடுகையில் சுமார் 76 சதவீதம் அதிகம் என்று மத்திய வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

மத்திய அரசு காப்பீடு, டிபென்ஸ், தொலைத்தொடர்பு, நிதிச் சேவைகள், பார்மா, சில்லறை வர்த்தகம் மற்றும் இ-காமர்ஸ் போன்ற பல முக்கியமான மற்றும் வேகமாக வளர்ச்சி அடைந்து வரும் துறைகளில் எஃப்டிஐ கொள்கையில் புதிய முதலீடுகளை ஈர்க்க வேண்டும் என்பதற்காகப் பல சீர்திருத்தங்களைச் செய்தது.

இந்தியாவின் பொம்மை உற்பத்தி துறை.. ஏற்றுமதி, இறக்குமதி நிலை என்ன தெரியுமா?

 சிங்கப்பூர் முதலிடம்

சிங்கப்பூர் முதலிடம்

இந்தியாவில் 2021-22 ஆம் ஆண்டில் சிங்கப்பூர் (27.01 சதவீதம்) மற்றும் அமெரிக்கா (17.94 சதவீதம்) ஆகி இரு நாடுகளும் டாப் முதலீட்டாளர்களாக உருவெடுத்துள்ளன. இதைத் தொடர்ந்து மொரிஷியஸ் (15.98 சதவீதம்), நெதர்லாந்து (7.86 சதவீதம்) மற்றும் சுவிட்சர்லாந்து (7.31 சதவீதம்) ஆகிய நாடுகள் இடம்பெற்றுள்ளது.

76 சதவீதம் உயர்வு

76 சதவீதம் உயர்வு

முந்தைய நிதியாண்டில் அதாவது 2020-21 ஆம் ஆண்டில் இந்திய உற்பத்தி துறையில் 12.09 பில்லியன் டாலர் அளவிலான முதலீட்டை பெற்ற நிலையில் 2021-22 நிதியாண்டில் FDI ஈக்விட்டி வரவு 21.34 பில்லியன் டாலர் உடன் சுமார் 76 சதவீதம் அதிகரித்துள்ளது என மத்திய வர்த்தக அமைச்சகம் வியாழக்கிழமை தெரிவித்துள்ளது.

ரூ.84.83 கோடி அன்னிய முதலீடு
 

ரூ.84.83 கோடி அன்னிய முதலீடு

உலகளவில் கொரோனா தொற்றும், பொருளாதாரத் தடுமாற்றம் இருந்த போதிலும் இந்தியா 2021-22 ஆம் நிதியாண்டில் வரலாற்றிலேயே அதிகப்படியான அன்னிய முதலீடாக 84.83 கோடி ரூபாய் அளவிலான முதலீட்டைப் பெற்றுள்ளது என வர்த்தக அமைச்சகம் தெரிவித்துள்ளது.

டாப் 5 மாநிலம்

டாப் 5 மாநிலம்

2021-22 ஆம் நிதியாண்டில் அதிகப்படியான அன்னிய நேரடி முதலீடு பெற்ற டாப் ஐந்து மாநிலங்கள் பட்டியலில் கர்நாடகா (37.55 சதவீதம்), மகாராஷ்டிரா (26.26 சதவீதம்), டெல்லி (13.93 சதவீதம்), தமிழ்நாடு (5.10 சதவீதம்) மற்றும் ஹரியானா (4.76 சதவீதம்) ஆகியவை இடம்பெற்றுள்ளது.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Manufacturing sector gets USD 21 billion FDI in FY22; TamilNadu attracts 5.10 percent FDI

Manufacturing sector gets USD 21 billion FDI in FY22; TamilNadu attracts 5.10 percent FDI உற்பத்தி துறையில் குவியும் அன்னிய முதலீடு.. டாப் 5 இடத்தில் தமிழ்நாடு..!

Story first published: Thursday, July 28, 2022, 17:42 [IST]

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.