எரிவாயு கட்டணம் 4,000 பவுண்டுகளை எட்டலாம்: பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு சிக்கல்


பிரித்தானியாவில் அடுத்த ஆண்டு எரிவாயு கட்டணமானது 4,000 பவுண்டுகளை எட்டலாம் என்ற அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.

சராசரி பிரித்தானிய குடும்பம் ஒன்று ஜனவரியில் மட்டும் 500 பவுண்டுகள் வரையில் செலவழிக்க நேரிடும் எனவும் கூறப்படுகிறது.

தற்போதைய சூழலில், நாட்டின் பாதிக்கும் மேற்பட்ட மக்கள் எரிவாயு பயன்படுத்த முடியாத நிலைக்கு தள்ளப்படுவார்கள் எனவும், 10 சதவீதத்திற்கும் அதிகமான குடும்பங்களின் மாத வருவாய் அதிகரிக்கும் எரிவாயு கட்டணங்களால் உறிஞ்சப்படும் என ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.

மேலும், Nord Stream திட்டத்தின் மூலமாக ஜேர்மனிக்கு அளித்துவந்த எரிவாயு அளவை ரஷ்யா குறைத்த பிறகு புதன்கிழமை ஒரு தெர்மல் அலகுக்கு 530p என உச்சம் கண்டது.
மட்டுமின்றி, அக்டோபரில் எரிசக்தி விலை வரம்பு 3,420 பவுண்டுகள் மற்றும் ஜனவரி மாத விலை உச்சவரம்பு 3,850 பவுண்டுகளை எட்டும் என்று கணிக்கப்பட்டுள்ளது.

2022 குளிர்காலத்தில் எரிவாயு விலை கடந்த ஆண்டு இந்த காலகட்டத்தில் இருந்து கிட்டத்தட்ட 10 மடங்கு உயர்ந்துள்ளது, மேலும் கடந்த குளிர்காலத்தில் இருந்த எரிவாயு விலையை விட இரண்டு மடங்கு அதிகமாகும்.

எரிவாயு கட்டணம் 4,000 பவுண்டுகளை எட்டலாம்: பாதிக்கும் மேற்பட்ட பிரித்தானியர்களுக்கு சிக்கல் | Brits In To Fuel Poverty Gas Bills Could Hit

மேலும், ரஷ்யா மற்றும் ஐரோப்பிய ஒன்றிய நாடுகளிடையே நடக்கும் மோதல் போக்கு எரிவாயு கட்டணத்தை மேலும் அதிகரிக்கும் என்றே கூறப்படுகிறது.
இதன் தாக்கம் பிரித்தானிய வாடிக்கையாளர்களையும் பாதிக்கும் என்றே ஆய்வாளர்கள் தரப்பு சுட்டிக்காட்டியுள்ளனர்.

ரஷ்யா உக்ரைன் மீது படையெடுப்பதற்கு முன்னரே எரிவாயு விலைகள் ஏற்கனவே உயர்ந்து கொண்டிருந்தன.
ஆனால் உலகின் எண்ணெய் பயன்பாட்டில் ரஷ்யா 12 சதவீதத்தை வழங்குவதால் கிட்டத்தட்ட ஒவ்வொரு நாளும் உயர்ந்து வந்துள்ளது.

மட்டுமின்றி, ஐரோப்பா நாடுகள் பொதுவாக அதன் எரிவாயு விநியோகத்தில் 40 சதவீதத்திற்கு ரஷ்யாவையே நம்பியுள்ளது.
ஓராண்டுக்கு முன்னர் ஒரு தெர்மல் அலகு 75p என இருந்தது, இந்த ஜனவரியில் 150p என வர்த்தகமானது, ஆனால் தற்போது 600% அதிகரித்து 530p என வர்த்தகமாகி வருவது குறிப்பிடத்தக்கது.  



Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.