ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டு சர்ச்சை! பிரபல நடிகருக்கு ஆதரவு தெரிவித்த தமிழ்ப்பட நடிகை


இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆடையில்லாமல் புகைப்படம் வெளியிட்டது சர்ச்சையை ஏற்படுத்திய நிலையில், நடிகை வித்யாபாலன் அவருக்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.

சமீபத்தில் பிரபல இந்தி நடிகர் ரன்வீர் சிங் ஆடையில்லாமல் போட்டோஷூட் நடத்தினார். இதுதொடர்பான புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது.

அதனைத் தொடர்ந்து அவருக்கு கடும் கண்டனங்கள் எழுந்தன. மேலும் ரன்வீர் சிங் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

பெண்களின் உணர்வுகளை புண்படுத்தும் விதமாக அவர் நடந்துகொண்டதாக போராட்டம் நடந்தது.

இந்த நிலையில் ரன்வீர் சிங்கிற்கு ஆதரவு தெரிவித்து பிரபல நடிகை வித்யாபாலன் நிகழ்ச்சி ஒன்றில் பேசியுள்ளார். அப்போது ரன்வீரின் போட்டோஷூட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

Ranveer Singh

அதற்கு அவர் கூறுகையில், ‘அதில் என்ன பிரச்சனை இருக்கிறது? ஒரு மனிதன் இப்படி செய்வது இதுவே முதல் முறை. நாமும் நம் கண்களுக்கு விருந்து செய்வோம்’ என தெரிவித்தார்.

மேலும், அவர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டது குறித்து கேட்டபோது, ‘ஒருவேளை அவர்களுக்கு அதிக வேலை இல்லை, எனவே தான் இந்த விடயங்களில் தங்கள் நேரத்தை வீணடிக்கிறார்கள். உங்களுக்கு பிடிக்கவில்லை என்றால், பின்னர் காகிதத்தை மூடி அல்லது எறிந்துவிட்டு நீங்கள் விரும்பியதை செய்யுங்கள். ஏன் வழக்கு போட வேண்டும்?’ என கூறினார்.

கடந்த ஆண்டு வெளியான 83 எனும் படத்தில் கபில் தேவ் கதாபாத்திரத்தில் அற்புதமாக நடித்து அனைவரது பாராட்டையும் பெற்ற ரன்வீர் சிங், தற்போது போட்டோஷூட் மூலம் வெறுப்பை சம்பாதித்துள்ளார்.

Vidya Balan

அதேபோல், தமிழில் அஜித்குமார் நடித்த நேர்கொண்ட பார்வை படத்தில் அவருக்கு ஜோடியாக வித்யாபாலன் நடித்திருந்தார். பெண்கள் மீதான அத்துமீறல்களுக்கு எதிரான கதையாக அந்த படம் அமைந்திருந்தது குறிப்பிடத்தக்கது.   Source link

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.