இந்திய பொருளாதாரம் மற்றும் வர்த்தகச் சந்தையும் கச்சா எண்ணெய் விலை உயர்வால் அதிகப்படியான வர்த்தகப் பாதிப்பை எதிர்கொண்டு வருகிறது.
இதைச் சமாளிக்கத் தள்ளுபடியில் கிடைக்கும் ரஷ்ய கச்சா எண்ணெய்-யை பல நெருக்கடிகளுக்கு மத்தியில் இந்தியா வாங்கி வருகிறது.
இதற்கு ஏற்றார் போல் இந்தியாவின் உற்பத்தி, வர்த்தகச் சந்தையை விரிவாக்கம் அடைந்து வருவதால் கச்சா எண்ணெய் தேவையும் அதிகரித்துள்ளது.
கச்சா எண்ணெய் – ஜியோ எதில் அதிக லாபம்? . ரிலையன்ஸ் காலாண்டு அறிக்கை குறித்த ஒரு பார்வை!

ஐக்கிய அரபு நாடுகளில்
இந்தியா தனது நீண்ட காலக் கச்சா எண்ணெய் நட்பு நாடான ஐக்கிய அரபு நாடுகளில் வாங்கும் அளவீட்டை கணிசமான குறைத்துவிட்டு, ரஷ்யாவிடம் இருந்து அதிகளவில் தள்ளுபடி விலைக்குக் கச்சா எண்ணெய் வாங்கி வருகிறது.

புதிய உக்தி
தற்போது இந்தியா அரசின் இந்தியன் ஆயில் வாயிலாக ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதியை அதிகரிக்கப் புதிய உக்தியை கையாண்டு உள்ளது. இது ரஷ்யா-வுக்கும் வியப்பு அளிக்கிறது என்பது தான் கூடுதல் சிறப்பு.

ரஷ்யா கச்சா எண்ணெய்
இந்திய ரஷ்யா கச்சா எண்ணெய்-யை அரசிடம் இருந்து மட்டும் வாங்காமல் பல வழிகளில் வாங்க முடிவு செய்துள்ளது, இதற்கு ஏற்றால் போல் ரஷ்ய சந்தையில் புதிய வாய்ப்புகளும் உருவாகியுள்ளது. இத டக்கராகப் பயன்படுத்துக் கொண்டுள்ளது இந்தியா.

பொருளாதார மந்த நிலை
பொருளாதாரம் மந்த நிலையிலும், வர்த்தக வீழ்ச்சியிலும் இருக்கும் ரஷ்யாவில் பல வர்த்தகர்கள் புதிய வாடிக்கையாளர்களைத் தேடிக் கொண்டு இருக்கின்றனர், இதில் சிறிய, பெரிய வர்த்தகர்களும் அடக்கம்.

2ஆம் உலகப் போர்
இதுப்போன்ற இக்கட்டான காலக்கட்டத்தில் தான் ஒரு நாட்டில் அதிகப்படியான வர்த்தக வாய்ப்புகள் உருவாகும், உதாரணமாக 2ஆம் உலகப் போருக்கு பின்பு உருவான பல நிறுவனங்கள் இன்று உலகின் முன்னணி நிறுவனங்களாக உள்ளது.

வியாபாரிகள்
இந்நிலையில் ரஷ்யாவில் தற்போது தள்ளுபடி விலையில் கச்சா எண்ணெய் விற்பனை செய்யும் பல வியாபாரிகள் இந்தியாவுக்கு விற்பனை செய்ய ஆர்வம் காட்டி வருவதால் மத்திய அரசு கட்டுப்பாட்டில் இயங்கும் இந்தியின் ஆயில் கார்ப் இவர்களுடன் இணைந்து அதிகக் கச்சா எண்ணெய்-ஐ ரஷ்யாவில் இருந்து வாங்கி வருகிறது.

இந்தியன் ஆயில்
இதில் முக்கியமான விஷயம் என்னவென்றால் சிறு வியாபாரிகளாக இருக்கும் காரணத்தால் இவர்களைக் கையாளுவதும், நிர்வாகம் செய்வதும் மிகவும் எளிதாக இருப்பதால் இந்தியன் ஆயில் அதிகளவில் சிறு வியாபாரிகளிடம் இருந்து கச்சா எண்ணெய் வாங்க ஆர்வம் காட்டுகிறது.

ரஷ்ய அரசின் Rosneft
இந்தியா அரசு நேரடியாக ரஷ்ய அரசின் Rosneft-யிடம் கச்சா எண்ணெய் வாங்கினாலும், தற்போது Wellbred, Montfort, Coral Energy, Everest Energy ஆகிய நிறுவனங்கள் இந்தியாவுக்குக் கச்சா எண்ணெய் ஆர்வம் காட்டி வருகிறது. இந்த ஐடியா ரஷ்யாவுக்கே வியப்பு அளிக்கிறது.
India buys more oil from Russia with middlemen help; Russia stunned on india’s action
India buys more oil from russia with middlemen help; Russia stunned on india’s action இந்தியா-வின் மாஸ்டர் பிளான்.. ரஷ்யா வியப்பு.. செம ஐடியா..!