இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபையின் உறுப்பினராக திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா மீண்டும் நியமனம்

திரு. அந்தோனி நிஹால் பொன்சேகா 2022 யூலை 27 தொடக்கம் நடைமுறைக்குவரும் வகையில் ஆறு ஆண்டுகாலத்திற்கு இலங்கை மத்திய வங்கியின் நாணயச் சபை உறுப்பினராக மீண்டும் நியமிக்கப்பட்டுள்ளார்.

இவர் முன்னர், 2016 யூலை தொடக்கம் 2020 மே வரையிலும் 2022 மே தொடக்கம் 2022 யூலை வரையிலும் நாணயச் சபையில் பணியாற்றியிருந்தார்.

இவர் கொழும்பு, இலங்கைப் பல்கலைக்கழகத்திலிருந்து தனது விஞ்ஞானமானிப் பட்டத்தை பெற்றுக்கொண்டதுடன் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய வங்கியாளர்கள் நிறுவனத்தின் சக உறுப்பினரும் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய பிணையங்கள் மற்றும் முதலீடுகள் நிறுவனத்தின் கௌரவ சக உறுப்பினருமாவார். இவர் ஜோன் கீல்ஸ் ஹோல்டிங்ஸ் பிஎல்சியின் மூத்த சுயாதீனப் பணிப்பாளர் மற்றும் குழுமக் கணக்காய்வுக் குழுவின் தலைவர், பீனிக்ஸ் இன்டஸ்ரீஸ் லிமிடெட்டின் தலைவர், பிரான்டிக்ஸ் லங்கா லிமிடெட்டின் நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் மற்றும் கணக்காய்வுக் குழுத் தலைவர் அத்துடன் பீனிக்ஸ் வென்ஜெர்ஸ் லிமிடெட்டின் நிறைவேற்றுத்தரமற்ற பணிப்பாளர் முதலீட்டுக் குழுத் தலைவர் ஆகிய பதவிகளை வகிக்கின்றார்.

தொழில் ரீதியாக வங்கியாளாரான திரு பொன்கோ உள்நாட்டு மற்றும் சர்வதேச வங்கித்தொழில் மற்றும் நிதித் துறையில் பல முக்கிய பதவிகளை வகித்துள்ளார். இவர் 13 ஆண்டுகளுக்கு மேல் டிஎவ்சிசி வங்கியின் முதன்மை நிறைவேற்று அலுவலராகவிருந்ததுடன் அப்பதவியினை வகிப்பதற்கு முன்னர் 10 ஆண்டுகளாக இலங்கை எச்எஸ்பீசியின் துணைப் பிரதம நிறைவேற்று அலுவலராகவிருந்தார். இவர் கொழும்பு பங்குப் பரிவர்த்தனை மற்றும் மனிலாவிலுள்ள ஆசிய மற்றும் பசுபிக் அபிவிருத்தி நிதி நிறுவனங்களின் அமைப்பு என்பவற்றின் தலைவராகவும் கொமர்சல் பாங் ஒப் சிலோன் பிஎல்சி மற்றும் டிஎவ்சிசி வர்த்தன வங்கி பிஎல்சி என்பவற்றின் பணிப்பாளராகவும் சேவையாற்றினார். இவர் 10 வருடங்களுக்கு மேல் ஐக்கிய இராச்சியத்தின் பட்டய பிணையங்கள் மற்றும் முதலீட்டு நிறுவனத்தின் இலங்கை தேசிய ஆலோசனைச் சபையின் தலைவராகவும் ஐக்கிய அமெரிக்கா – இலங்கை புல்பிரைட் ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்தார்.

திரு. பொன்சேகா அரசாங்கத் துறையிலும் பல பதவிகளை வகித்துள்ளார். இவர் வரி விதிப்பு மீதான 2019 சனாதிபதி ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் அரசியலமைப்பின் கீழ் தாபிக்கப்பட்ட தேசிய பெறுகை ஆணைக்குழுவின் உறுப்பினராகவும் இருந்துள்ளார். இவர் கொடுகடன் தகவல் பணியகம், ஊழியர் நம்பிக்கைப் பொறுப்பு நிதியம் ஆகியவற்றின் பணிப்பாளராகச் சேவையாற்றியதுடன் பொருளாதார அபிவிருத்தி – மூலதனச் சந்தைக் கொத்தணிக்கான தேசிய சபையின் இணைத் தலைவராகவும் இருந்துவருகின்றார்.

திரு. பொன்சேகா பல கட்டுரைகளை எழுதியுள்ளதுடன் உள்நாட்டிலும் சர்வதேச ரீதியாகவும் கருத்தரங்குகள் மற்றும் மாநாடுகளில் பல எடுத்துரைப்புக்களை நிகழ்த்தியுள்ளார்.

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.