இனி பெண்களின் ராஜியம் தான்.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..!

கொரோனா தொற்றுக் காரணமாக அறிவிக்கப்பட்ட லாக்டவுன் மூலம் பல மாற்றங்கள் நிகழ்ந்துள்ளது இதில் முக்கியமான மாற்றம் தான் வீட்டில் இருந்து பணியாற்றுவது.

வர்த்தகத்தையும், வருமானத்தையும் காப்பாற்ற வேண்டும் என்பதற்காகக் கொரோனா வின் தொடக்கத்தில் நிறுவனங்கள் ஊழியர்கள் வீட்டில் இருந்து பணியாற்ற அனுமதி அளிக்கத் துவங்கியது.

இதில் மிகப்பெரிய வெற்றி வாய்ப்பு உருவானது மட்டும் அல்லாமல் படித்த பெண்கள், வேலை அனுபவம் கொண்ட பெண்கள் பல கோடிப்போர் பல்வேறு காரணத்தால் வீட்டில் முடங்கியிருக்க வேண்டிய நிலையில் இருந்தவர்களுக்குத் தங்க றெக்கை கொடுத்துள்ளது இந்த வொர்க் ப்ரம் ஹோம்.

Nirma சோப்பு தூள் நிறுவனம் கண்ணாடி நிறுவனத்தை வாங்குகிறதா..?

கொரோனா தொற்று

கொரோனா தொற்று

கொரோனா தொற்றுக்குப் பின்பு இந்திய வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்கீடு குறைந்துள்ளதாகக் கூறப்பட்டாலும், ஐடி மற்றும் டெக் சேவை போன்ற பல துறைகளில் குறிப்பாக வீட்டில் இருந்தே பணியாற்ற அனுமதிக்கும் துறை, பிரிவு, நிறுவனங்களில் பெண் ஊழியர்கள் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருகிறது என்பதை ஒப்புக்கொள்ளத் தான் வேண்டும்.

work from home சேவை

work from home சேவை

தற்போது வீட்டில் இருந்து பணியாற்ற மத்திய அரசு லேபர் விதிமுறைகளில் மாற்றங்களைக் கொண்டு வந்துள்ள நிலையில் அனைத்துத் துறை நிறுவனங்களும் தற்போது செலவுகளைக் குறைக்கவும், அதிகப்படியான ஊழியர்களை நியமித்து வேகமாக வளர்ச்சி அடைய வேண்டும் என்பதற்காக work from home (WFH), work from anywhere (WFA) மற்றும் ஹைப்ரிட் மாடல்களை அளித்து வருகிறது.

பெண்கள்
 

பெண்கள்

இதன் மூலம் WFH, WFA மற்றும் ஹைப்ரிட் மாடலை கொண்டுள்ள நிறுவனங்களிலும், இந்த வசதிகளை அளிக்கும் வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் பெண்களின் எண்ணிக்கை பெரிய அளவில் அதிகரித்துள்ளதாகச் சந்தை நிலவரங்கள் கூறுகிறது.

தாறுமாறான உயர்வு

தாறுமாறான உயர்வு

RPG குரூப் வெளியிட்டுள்ள தரவுகள் படி காலியாக உள்ள வேலைவாய்ப்புகளுக்கு விண்ணப்பிக்கும் அளவு 15-20 சதவீதம் வரையில் வளர்ச்சி அடைந்துள்ளதாக அறிவித்துள்ளது. இதேபோல் எட்டெக் யூனிகார்ன் நிறுவனமான Eriditus நிறுவனம் பெண் ஊழியர்களின் விண்ணப்பம் 51 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது. இதுபோல் மிட் சீனியர் பிரிவில் 47 சதவீதம் அதிகரித்துள்ளதாகத் தெரிவித்துள்ளது.

SpringWorks நிறுவனம்

SpringWorks நிறுவனம்

ஹெச்ஆர் டெக்னாலஜி நிறுவனமான SpringWorks நிறுவனம் தனது ஊழியர்களுக்கு 100 சதவீதம் வொர்க் ப்ரம் கொடுத்துள்ள நிலையில் பெண் ஊழியர்களின் விண்ணப்பம் 35 சதவீதம் வரையில் அதிகரித்துள்ளதாக அறிவித்துள்ளது.

ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள்

ஐடி மற்றும் டெக் நிறுவனங்கள்

இந்தியாவில் தற்போது உலக நாடுகளைப் போல் ஐடி மற்றும் டெக் நிறுவனங்களைத் தாண்டி பிற துறைகளிலும் வொர்க் ப்ரம் ஹோம் சேவையை அளித்து வருகிறது. இது இந்தியாவில் நீண்ட காலமாக வேலைவாய்ப்புச் சந்தையில் பெண்களின் பங்கீடு குறைவாக இருந்த நிலையை WFH, WFA மற்றும் ஹைப்ரிட் மாடல் கட்டாயம் மாற்றும்.

தமிழ் குட்ரிட்டன்ஸ் செய்திகளை உடனுக்குடன் படிக்க
English summary

Women applying jobs more than ever companies that offer work from home

Women applying jobs more than ever companies that offer work from home இனி பெண்களின் ராஜியம் தான்.. இந்தியாவுக்கு ஜாக்பாட்..!

Leave a Comment

This site uses Akismet to reduce spam. Learn how your comment data is processed.